விஜய் முதல் யோகிபாபு வரை... வாரிசு படத்தில் நடித்த பிரபலங்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு? முழு விவரம் இதோ
மொத்தமாக ரூ.227 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விஜய் நடித்துள்ள வாரிசு குடும்ப படமாக தயாராகி உள்ளது. இப்படம் நாளை உலகமெங்கும் ரிலீசாக உள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் முதன்முறையாக நடித்துள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்திருக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அவர்களுக்கெல்லாம் வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வாரிசு திரைப்படம் மொத்தமாக ரூ.227 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நடிகர் விஜய்க்கு தான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு இப்படத்திற்காக ரூ.125 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. அவரின் கெரியரில் ஒரு படத்துக்காக அவர் வாங்கிய அதிகபட்ச சம்பளம் இதுவாகும்.
இதையும் படியுங்கள்... சபரிமலையில் அட்ராசிட்டி செய்த அஜித், விஜய் ரசிகர்கள்... அதிரடி உத்தரவு பிறப்பித்த கேரள உயர்நீதிமன்றம்
விஜய்க்கு அடுத்தபடியாக இப்படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா ரூ.4 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். அதேபோல் அனுபவ நடிகர்களான சரத்குமாருக்கு ரூ.2 கோடியும், பிரபுவுக்கு ரூ.2 கோடியும், பிரகாஷ் ராஜுக்கு ரூ.1.5 கோடியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்துள்ள நடிகர் ஷியாமுக்கு ரூ.1 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம்.
இப்படத்தில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்துக்கு ரூ.60 லட்சமும், விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ள ஜெயசுதாவுக்கு ரூ.30 லட்சமும், கேமியோ ரோலில் நடித்திருக்கும் நடிகை குஷ்புவுக்கு ரூ.40 லட்சமும், காமெடியனாக நடித்துள்ள யோகிபாபுவுக்கு ரூ.35 லட்சமும் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறதாம். இப்படம் தெலுங்கில் வாரசுடு என்கிற பெயரில் வருகிற ஜனவரி 14-ந் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஒற்றை வார்த்தைக்காக மனம் மாறிய சந்தானம்! AK 62 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதன் பின்னணி என்ன தெரியுமா?