- Home
- Cinema
- Varisu movie : அடுத்த கட்டத்திற்கு சென்ற ‘வாரிசு’... தளபதியின் படத்தில் இருந்து சுடச்சுட வந்த சூப்பர் அப்டேட்
Varisu movie : அடுத்த கட்டத்திற்கு சென்ற ‘வாரிசு’... தளபதியின் படத்தில் இருந்து சுடச்சுட வந்த சூப்பர் அப்டேட்
Varisu movie Update : வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷியாம், சரத்குமார், பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் விஜய். இவர் நடிக்கும் அடுத்தடுத்து படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து வருவதனால் தயாரிப்பாளர்களும் ரசிகர்களும் அவரை செல்லமாக இப்படி அழைக்கின்றனர். அந்த வகையில் இவர் நடிக்கும் 66-வது படம் வாரிசு. இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.
வாரிசு படத்தின் மூலம் நடிகர் விஜய்யும், நடிகை ராஷ்மிகாவும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். இதுதவிர இப்படத்தில் சரத்குமார், ஷியாம், சங்கீதா, பிரபு, பிரகாஷ் ராஜ், சம்யுக்தா, யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார். இப்படத்தில் ஆப் டெவலப்பராக நடிகர் விஜய் நடிக்கிறார்.
இதையும் படியுங்கள்... Nayanthara : லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க மறுத்ததால் முக்கிய அந்தஸ்தை இழந்து தவிக்கும் நயன்தாரா
வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இவர் நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை. இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. தில் ராஜூ பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதன் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையிலும், அடுத்த கட்ட ஷூட்டிங் ஐதராபாத்திலும் நடந்து வந்த நிலையில், மூன்றாம் கட்ட ஷூட்டிங் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி வாரிசு படத்தின் மூன்றாம்கட்ட ஷூட்டிங் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படக்குழு அதில் கலந்துகொள்ள உள்ளனர்.
இதையும் படியுங்கள்... விஜய் உடன் கூட்டணி அமைக்கிறாரா டான் பட இயக்குனர்?... உண்மையை ஓப்பனாக போட்டுடைத்த சிபி சக்ரவர்த்தி