சாட்டையை சுழற்றும் விஜய்; சரவெடியாய் வந்த ‘ஜன நாயகன்’ செகண்ட் லுக்
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சாட்டையை சுழற்றும் விஜய்; சரவெடியாய் வந்த ‘ஜன நாயகன்’ செகண்ட் லுக்
நடிகர் அஜித்தை வைத்து வலிமை, துணிவு, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத், தளபதி விஜய் உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் ஜன நாயகன். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமிதா பைஜு, டிஜே அருணாச்சலம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
Jana Nayagan Movie Team
ஜன நாயகன் திரைப்படம் தான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். இப்படத்தை முடித்த கையோடு நடிகர் விஜய் தீவிர அரசியலில் இறங்க உள்ளார். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள அவர், வருகிற 2026-ம் ஆண்டு அரசியலில் களமிறங்க உள்ளார். ஜன நாயகன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... நாளைய தீர்ப்பு இல்ல; புது டைட்டில் உடன் வந்த தளபதி 69 பர்ஸ்ட் லுக்
Jana Nayagan First Look
ஜன நாயகன் திரைப்படத்தில் நடிகர் விஜய் ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும் வதந்திகள் பரவின. ஆனால் அதுபற்றி எந்த வித தகவலையும் வெளியிடாமல் படக்குழு சீக்ரெட்டாக வைத்திருக்கிறது. ஜன நாயகன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குடியரசு தினமான இன்று அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்யப்பட்டது.
Jana Nayagan Second Look
அதில் தொண்டர் படை உடன் நடிகர் விஜய் செல்பி எடுப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இதுபோதாதென்று, தற்போது அப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் செம மாஸ் லுக்கில் காட்சியளிக்கிறார் விஜய். கையில் சாட்டையை சுழற்றியபடி விஜய் போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படத்தில் நான் ஆணையிட்டால் என்கிற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளும் இடம்பெற்றுள்ளது. சரவெடியாய் வெளிவந்துள்ள இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... அஜித் பக்கம் போகஸை திருப்பிய அரசியல் கட்சிகள்; சைலண்ட் மோடில் விஜய்!