அஜித் பக்கம் போகஸை திருப்பிய அரசியல் கட்சிகள்; சைலண்ட் மோடில் விஜய்!
நடிகர் அஜித் பத்ம பூஷன் விருது வென்றதும் அவர் பக்கம் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தி வரும் நிலையில், நடிகர் விஜய் மட்டும் வாழ்த்து சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்.
அஜித் பக்கம் போகஸை திருப்பிய அரசியல் கட்சிகள்; சைலண்ட் மோடில் விஜய்!
நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விருதை பெறும் 5-வது தமிழ் நடிகர் அஜித் ஆவார். இதற்கு முன்னதாக சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோருக்கு மட்டுமே பத்ம பூஷன் விருது கிடைத்திருக்கிறது. பத்ம பூஷன் விருது வென்றுள்ள நடிகர் அஜித்துக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டு வாழ்த்தி வருகின்றன.
Seeman
சீமான் வாழ்த்து
தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர் அன்புத்தம்பி அஜித்குமார் அவர்களுக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகவும் மகிழ்ந்தேன். தன் கடும் உழைப்பால், தன் கவிர்ந்திழுக்கும் நடிப்புத்திறனால் வெற்றிப்படங்கள் பல தந்து, லட்சக்கணக்கான ரசிகர்களின் பேரன்பினையும் பெற்று, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட தம்பி அஜித் அவர்கள், மகிழுந்து பந்தயத்திலும் பெரும் ஈடுபாடு கொண்டு, அண்மையில் அவரது அணி வெற்றிவாகை சூடி வரலாறு படைத்தது பேருவகை அளித்தது.
திரைத்துறையோ, விளையாட்டோ தேர்ந்தெடுத்த துறை எதுவானாலும் தம்முடைய அயராத முயற்சியால் தனிமுத்திரை பதித்து, சாதனை படைக்கும் தம்பி அஜித்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பத்மபூஷன் விருதானது தகுதிவாய்ந்தவருக்கு மிகச்சரியாக வழங்கப்பட்டுள்ள விருதாக கருதுகிறேன். அன்புத்தம்பி அஜித்குமார் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!
EPS
எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து
நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளுள் ஒன்றான "பத்ம பூஷன்" விருது பெறத் தேர்வாகியுள்ள தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர், கலை, விளையாட்டு, ட்ரோன் வடிவமைப்பு என பல்துறைகளில் தனக்கென தனிமுத்திரை பதித்துள்ள அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார்
அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். இன்னும் பல சிகரங்களைத் தொட்டு, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் புகழ் சேர்க்க வாழ்த்துகிறேன்.
இதையும் படியுங்கள்... பத்ம பூஷன் விருது வென்ற நடிகர் அஜித்; இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?
ADMK Jayakumar
அதிமுக ஜெயக்குமார் வாழ்த்து
தன் வாழ்வின் பல கட்டங்களில் கடுமையான நெருக்கடிகளை கடந்து விடாமுயற்சியுடன் பல நிலைகளை வென்று பத்மபூஷண் விருது பெறவுள்ள சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! கடின உழைப்புகளால் கனவுகளையும் கடந்த இடத்தை பிடிக்கலாம் என எண்ணற்ற இளைஞர்களுக்கு உதாரணமாக உள்ள அஜித் இன்னும் பல சாதனைகளும் அதற்கான விருதுகளும் பெற்றிட வேண்டும்!
Ajithkumar
அஜித் பக்கம் திரும்பிய போகஸ்
மேற்கண்ட அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாஜக சார்பில் அண்ணாமலை மற்றும் தமிழிசை செளந்தர்ராஜன் என அரசியல் கட்சித் தலைவர்கள் போட்டிபோட்டு அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருவது 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அவரது ரசிகர்களின் வாக்கு வங்கிகளை பிடிப்பதற்காக தான் என பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் புது குண்டை தூக்கிப்போட்டுள்ளார்.
Ajith, Vijay
வாழ்த்து தெரிவிக்காத விஜய்
அஜித்துக்கு இப்படி அரசியல் தலைவர்கள் போட்டி போட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் விஜய் மட்டும் சைலண்ட் மோடில் இருக்கிறார். தனக்கு விருது கிடைக்காத விரக்தியில் அவர் இருப்பதாக நெட்டிசன்கள் கொளுத்திப் போட்டு வருகின்றனர். மறுபுறம் விஜய் தொலைபேசி வாயிலாக அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தளபதி தரப்பில் இருந்து இதுவரை எந்தவித அப்டேட்டும் வரவில்லை.
Padma Bhushan Award Winner Ajith
பாஜகவின் அரசியலா?
அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கியதில் பாஜகவின் அரசியல் உள்குத்து இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இதற்கு முன்னர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியபோது ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்ததை போல் தற்போது விஜய் தங்களுக்கு எதிராக அரசியலில் குதித்துள்ளதால் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டு இருப்பதாக ஒப்பிட்டு பேசி வருகிறார்கள் இணையவாசிகள்.
இதையும் படியுங்கள்... அஜித்துக்கு முன் பத்ம பூஷன் விருது வென்ற தமிழ் நடிகர்கள் இத்தனை பேரா?