தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் மாஸ் காட்டிய விஜய்... வாரசுடு படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளது தெரியுமா?
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஆன வாரசுடு திரைப்படம் நேற்று வெளியான நிலையில், அதன் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், ஷியாம், சம்யுக்தா, சங்கீதா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, பிரபு, யோகிபாபு, சரத்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. அதன்படி தமிழில் ரிலீசான மூன்றே நாட்களில் வாரிசு திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. வாரிசு படத்தின் தெலுங்கு வெர்ஷனான வாரசுடு திரைப்படம் நேற்று தான் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
இதையும் படியுங்கள்... வாரிசு படம் பார்த்து ஆனந்தக் கண்ணீர்விட்ட தந்தை... நெகிழ்ந்துபோன இயக்குனர் வம்சி - வைரல் வீடியோ
அங்கும் விஜய் படத்திற்கு மாஸ் ஆன வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தை தெலுங்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகின்றன. வாரிசு படத்தைப் போல் வாரசுடு படமும் மக்கள் மனதில் கனெக்ட் ஆகிவிட்டதால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.
இந்நிலையில், வாரசுடு படத்தின் முதல் நாள் கலெக்ஷன் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் ரூ.4.5 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இனி அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வாரிசு படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமை ரூ.17 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... துணிவு - வாரிசு இடையே நடக்கும் கடும் போட்டி! 3வது நாளில் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார்?