வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் டாப் ஹீரோஸ் யார்.. யார்? லீக்கான மாஸ் தகவல்
தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள உள்ள சிறப்பு விருந்தினர்கள் குறித்து ஒரு தகவல் கசிந்துள்ளது.
விஜய் நடித்து வாரிசு படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் உடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு, சரத்குமார், ஷியாம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
தமன் இசையமைத்துள்ள இப்படத்தை தில் ராஜு பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது. வாரிசு படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படம் குறித்த அப்டேட்டும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... அஜித் கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு... பொக்கிஷமாக பாதுகாப்பேன் என மாஸ்டர் பட நடிகர் உருக்கம்
அந்த வகையில், வருகிற டிசம்பர் 24-ந் தேதி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியை பிக்பாஸ் பிரபலம் ராஜு தான் தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ள சிறப்பு விருந்தினர்கள் குறித்து ஒரு தகவல் கசிந்துள்ளது.
அதன்படி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, பாலிவுட் நடிகர் ஷாருக்கான், மற்றும் தளபதி 67 படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளதாகவும், இதுதவிர சிம்பு மற்றும் அனிருத்தும் இந்த விழாவில் பாடல் பாட உள்ளதாகவும் தகவல் பரவி வருகின்றன. இருப்பினும் படக்குழு இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... என்னை பலமுறை அழ வைத்த பாடல் இது... soul of varisu பாடல் குறித்து இசையமைப்பாளர் தமன் உருக்கம்