MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஓடிடி-யிலும் மோதலா? வாரிசு - துணிவு படங்கள் டிஜிட்டல் தளங்களில் ரிலீஸ் ஆவது எப்போது?

ஓடிடி-யிலும் மோதலா? வாரிசு - துணிவு படங்கள் டிஜிட்டல் தளங்களில் ரிலீஸ் ஆவது எப்போது?

பொங்கல் ரேஸில் நேருக்கு நேர் மோதிய விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஓடிடியிலும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

1 Min read
Author : Ganesh A
Published : Jan 20 2023, 07:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதமாக வாரிசு மற்றும் துணிவு படங்களைப் பற்றிய பேச்சு தான் அதிகளவில் இருந்துள்ளது. ரிலீசுக்கு பின்னும் அந்த இருபடங்களைப் பற்றிய பேச்சுக்கள் குறைந்தபாடில்லை. தற்போது வசூலில் யார் நம்பர் 1 என்கிற போட்டியும் ஒருபக்கம் நிலவி வருகிறது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் விஜய்யும், அஜித்தும் தங்களது அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கி விட்டனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். மறுபுறம் நடிகர் அஜித், விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதில் தளபதி 67 பட ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏகே 62 பட ஷூட்டிங் அடுத்தமாதம் தொடங்கப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்... கோடியில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு கூட இந்த மனசு வராது! பட விழாவில் ஆச்சரியப்படுத்திய ஆர்.ஜே.பாலாஜி!

34

இந்நிலையில், பொங்கல் ரேஸில் நேருக்கு நேர் மோதிய விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஓடிடியிலும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துணிவு படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும், வாரிசு படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனமும் கைப்பற்றி உள்ளது.

44

இந்த இரண்டு படங்களும் வருகிற பிப்ரவரி 10-ந் தேதி ஓடிடி-யில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வாரிசு படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் ரூ.75 கோடிக்கும், துணிவு படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.65 கோடிக்கும் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு படங்களின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஜெயிலர் படத்தில் இணைந்த தமன்னா! உறுதி செய்த சன் பிக்ச்சர்ஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pradeep Rangathan Film Update : மீண்டும் இணையும் Dude ஜோடி! தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்!
Recommended image2
முதல்வர் விஜய் பதவியேற்பில் அந்த 3 பேர் இருந்திருக்க வேண்டும்.! பொதுமக்கள் கருத்தை போட்டுடைத்த சமுத்திரகனி.!
Recommended image3
Pandian Stores 2 : குமாருக்கு கல்தா... மோதலில் ஆரம்பித்த அரசியின் புது காதல் - எதிர்பாரா ட்விஸ்ட்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved