- Home
- Cinema
- லோகேஷ் ரொம்ப ஸ்பீடுப்பா... அதுக்குள்ள அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்கு ரெடியான லியோ படக்குழு - எப்போ ஆரம்பம்?
லோகேஷ் ரொம்ப ஸ்பீடுப்பா... அதுக்குள்ள அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்கு ரெடியான லியோ படக்குழு - எப்போ ஆரம்பம்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் லியோ. மாஸ்டர் படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்து வருகிறது. நடிகர் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் இப்படத்தில் கவுதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கதிர், பிக்பாஸ் ஜனனி, அபிராமி வெங்கடாசலம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
லியோ படத்தின் படப்பிடிப்பை கடந்த ஜனவரி மாதம் தொடங்கினர். சென்னை மற்றும் மூணாரில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து ஒட்டுமொத்த படக்குழுவினருடன் தனி விமானத்தில் காஷ்மீருக்கு பறந்ததது. அங்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 50 நாட்களுக்கு மேல் தங்கி ஷூட்டிங்கை முடித்த படக்குழு, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் சென்னை திரும்பியது.
இதையும் படியுங்கள்... அஜித்தின் ஏகே 62-வை தொடர்ந்து... விக்னேஷ் சிவனிடம் இருந்து கைநழுவிப்போன மற்றுமொரு படம்..?
சென்னையில் இரண்டு வாரம் ஓய்வெடுத்துவிட்டு அடுத்தக்கட்ட ஷூட்டிங்கை தொடங்குவார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில், நாளை அதாவது மார்ச் 29-ந் தேதியே சென்னையில் லியோ படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் தொடங்க உள்ளதாம். பிலிம் சிட்டியில் வைத்து தான் இந்த ஷூட்டிங் நடைபெற உள்ளதாகவும், இதில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் ஷூட்டிங்கை முடித்த பின்னர், இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்த உள்ளாராம் லோகேஷ். அங்கு விமான நிலைய செட் ஒன்று இதற்காக அமைக்கப்பட்டு வருகிறதாம். அந்த செட்டில் தான் லியோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம். லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவதார் 2’ திரைப்படம் ஓடிடி-க்கு வந்தாச்சு - எந்தெந்த தளங்களில் ரிலீஸ் தெரியுமா?