MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அஜித்தின் ஏகே 62-வை தொடர்ந்து... விக்னேஷ் சிவனிடம் இருந்து கைநழுவிப்போன மற்றுமொரு படம்..?

அஜித்தின் ஏகே 62-வை தொடர்ந்து... விக்னேஷ் சிவனிடம் இருந்து கைநழுவிப்போன மற்றுமொரு படம்..?

அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் கைவசம் இருந்த மேலும் ஒரு படமும் நழுவிப்போய் உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 28 2023, 02:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு 2023-ம் ஆண்டு மிகவும் மோசமான ஒரு ஆண்டாகவே அமைந்துள்ளது. அவர் இந்த ஆண்டு அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் ஷூட்டிங் தொடங்குதற்கு சில தினங்களுக்கு முன் அப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கிவிட்டது லைகா நிறுவனம். அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்து அப்படத்தின் பணிகள் நடக்கிறது.

24

ஏகே 62 படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக கடும் அப்செட்டில் இருந்த விக்னேஷ் சிவனுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆவரை வைத்து எல்.ஐ.சி என்கிற படத்தை எடுக்க தயாராகி வருகிறார் விக்கி. மேலும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஏகே 62 வாய்ப்பு பறிபோன சோகத்தில் இருந்த விக்கி கமல் தயாரிப்பில் படம் கிடைத்ததால் செம்ம குஷியில் இருந்தாராம்.

இதையும் படியுங்கள்... மண்டைல இருக்க கொண்டைய மறந்துட்டீங்களே பாஸ்..! இளம் நடிகையுடன் டேட்டிங்... வசமாக சிக்கிய சமந்தாவின் மாஜி கணவர்

34

இந்நிலையில், அவர் கைவசம் இருந்து மற்றுமொரு திரைப்படம் கைநழுவி சென்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாரா உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதில் நடிகர் கவினை வைத்து ஊர்க்குருவி என்கிற திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. இப்படத்தை அருண் என்பவர் இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

44

அந்த படத்தின் ஷூட்டிங்கே தொடங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அந்த படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்கவில்லை என்கிற தகவல் வெளிவந்துள்ளது. அவருக்கு பதில் ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்கிற நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும். இப்படத்தின் ஹீரோவாக கவினுக்கு பதில் குக் வித் கோமாளில் பிரபலம் அஸ்வின் குமார் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளாராம் இயக்குனர் அருண்.

இதையும் படியுங்கள்... லோ நெக் ஜாக்கெட்டில்... இன்ஸ்டாக்ராமை சூடேற்றிய கீர்த்தி சுரேஷ்! தாறுமாறு லுக்கில் செம்ம ஹாட் போஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏ.ஆர்.ரகுமானை காதலித்த நடிகை... திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட அந்த நாயகி யார்?
Recommended image2
Pandian Stores 2 Today Episode : அஞ்சலி பற்றி கேட்ட மீனா... ஆடிப்போன சரவணன் - இன்றைய எபிசோடில் செம ட்விஸ்ட்
Recommended image3
Ayyanar Thunai : டைவர்ஸுக்கு நாள் குறித்த நிலா... அதிர்ச்சியில் சோழன் - அனல்பறக்கும் இன்றைய எபிசோடு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved