- Home
- Cinema
- மண்டைல இருக்கிற கொண்டைய மறந்துட்டீங்களே பாஸ்! இளம் நடிகையுடன் டேட்டிங்... வசமாக சிக்கிய சமந்தாவின் மாஜி கணவர்
மண்டைல இருக்கிற கொண்டைய மறந்துட்டீங்களே பாஸ்! இளம் நடிகையுடன் டேட்டிங்... வசமாக சிக்கிய சமந்தாவின் மாஜி கணவர்
நடிகை சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் பட நடிகையுடன் டேட்டிங் சென்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், கடந்த 2021-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். இதையடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் நாக சைதன்யா பற்றி அடிக்கடி காதல் கிசுகிசுக்களும் பரவி வருகின்றன. குறிப்பாக நடிகையுடன் டேட்டிங் சென்றதாகவும் செய்திகள் வெளியானது.
சமந்தாவை பிரிந்த பின்னர் நடிகர் நாகசைதன்யா, நடிகை சோபிதா துலிபாலா உடன் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் வெளியாகின. நடிகை சோபிதா, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆவார். இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... நிர்வாணமா வீடியோ அனுப்பு... 15 லட்சம் தாரேன் - மெசேஜ் மூலம் டீல் பேசியவரை தலைதெறிக்க ஓடவிட்ட சீரியல் நடிகை
அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்தாண்டு இருவரும் லண்டனுக்கு ஜோடியாக சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படமும் வெளியானது. பின்னர் அது எடிட்டிங் செய்யப்பட்ட புகைப்படம் என கூறப்பட்டதால் இவர்களைப் பற்றிய காதல் கிசுகிசுக்கள் கடந்த சில மாதங்களாக சற்று ஓய்ந்து இருந்தன. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகி இவர்கள் இருவரும் லண்டனில் ஜோடியாக சுற்றியதை உறுதிப்படுத்தி உள்ளது.
நாக சைதன்யா லண்டனுக்கு சுற்றுலா சென்றபோது அங்குள்ள ஓட்டல் ஒன்றிற்கு சோபிதா உடன் உணவருந்த சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த செஃப் ஒருவர் நாக சைதன்யா உடன் போட்டோ எடுத்து அந்த போட்டோவை கடந்த பிப்ரவரி மாதம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அந்த போட்டோ அவர் பதிவிட்ட போது சரியாக கவனிக்காத நெட்டிசன்கள் தற்போது அந்த போட்டோவில் நடிகை சோபிதா பின்னால் அமர்ந்திருப்பதை தற்போது கண்டுபிடித்து அதனை வைரலாக்கி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... AK62 படத்திற்கு முன்பே.. டிஜிட்டலில் வெளியாகும் அஜித்தின் வேற லெவல் படம்! ரசிகர்களுக்கு காத்திருக்கு ட்ரீட்!