- Home
- Cinema
- திடீர் மாரடைப்பால் சுருண்ட பிரபல நடிகர்; பதறிய தளபதி விஜய் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
திடீர் மாரடைப்பால் சுருண்ட பிரபல நடிகர்; பதறிய தளபதி விஜய் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
PT Selvakumar : தளபதி விஜய்க்கு மேலாளராக பல வருடங்கள் பணியாற்றிய... தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பி.டி.செல்வகுமார்:
தமிழ் சினிமாவில், பல்வேறு திறமைகளை வெளிக்காட்டி தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபலங்கள் பலர் உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு பிரபலம் தான் பி.டி.செல்வகுமார்.
தளபதியுடன் 27 வருட பயணம்:
கன்னியாகுமரியை சேர்ந்த இவர், சினிமா துறையில் மக்கள் தொடர்பாளராக தன்னுடைய பணியை துவங்கி, சுமார் 27 வருடங்கள் தளபதி விஜய்க்கு மேலாளராக பணியாற்றினார். மக்கள் தொடர்பாளராக இருக்கும் போதே... 1994-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றிபெற்ற, 'நாட்டாமை' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இதை தொடர்ந்து, விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, பந்தா பரமசிவம், ஜெயில் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
ராகவா லாரன்ஸின் புதிய முயற்சி: ஏழைகளின் பசியை போக்கும் கண்மணி அன்னதான விருந்து!
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்:
அதே போல் பந்தா பரமசிவம், புலி, போக்கிரி ராஜா போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார். 2013-ஆம் ஆண்டு வினய் நடிப்பில் வெளியான 'ஒன்பதுல குரு' என்கிற படத்தை இயக்கியவரும் பி.டி.செல்வகுமார் தான். இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றாலும், தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தினார். இவர் பிக்பட்ஜெட்டில் தயாரித்த புலி திரைப்படம் மோசமான தோல்வியை தழுவியது மட்டும் இன்றி, பி.டி.செல்வகுமாருக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்தியது.
டிஆர்பி ரேஸில் இந்த வாரம் அதிக ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன?
பி.டி. செல்வகுமாருக்கு மாரடைப்பு:
இந்நிலையில், தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமாருக்கு திடீர் என நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரது உறவினர்கள் நாகர்கோவில் அருகே உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தற்போது இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இதயத்தில் அடைப்பு உள்ளதால், அதனை நீக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சை
இன்னும் ஓரிரு நாட்களில் இவருக்கு அறுவை சிகிச்சை செய்யவும் திட்டமிட்டு உள்ளனர். இந்த சம்பவம் தற்போது... கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தளபதி விஜய்க்கு பி.டி.செல்வகுமார் மிகவும் நெருக்கமானார் என்பதால் போன் மூலம் அவருடைய உடல்நிலை குறித்து விஜய் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.