சமூக சேவையில் ஈடுபட்டு வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அடுத்த புதிய முயற்சியாக அம்மாவின் பெயரில் கண்மணி அன்னதான விருந்து என்ற சமூக திட்டத்தை தொடங்கியுள்ளார்.

கண்மணி அன்னதான விருந்து:

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ். டான்ஸ் மாஸ்டராக ஆரம்பித்து இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முக கலைஞராக திகழ்கிறார். பேய் தொடர்பான கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்து ரசிகர்களின் ஹார்ட் பீட்டை அதிகரிக்க செய்கிறார். இவரது நடிப்பில் முனி, காஞ்சனா 2, காஞ்சனா 3 என்று ஹாரர் த்ரில்லர் படங்கள் வெளியான நிலையில் இப்போது காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பையும் தொடங்கியுள்ளார்.

அக்காவிற்கு ஷாக் கொடுத்த பாண்டியன்: அரசியின் முடிவு இது தான்; திட்டவட்டமாக பதில் சொன்ன பாண்டியன்!

இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தார். அதில், மற்றொரு செய்தியையும் வெளியிட்டிருந்தார். அதாவது, தான் முதல் முதலாக கட்டிய வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதில், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சியை தொடங்கியுள்ளதாக தெரிவித்திருந்தார். எப்போதும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் ராகவா லாரன்ஸ் இப்போது புதிய முயற்சியாக சமூக திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

நாஞ்சில் விஜயன் மீதான புகாரை வாபஸ் பெற்ற திருநங்கை வைஷு; பப்ளிசிட்டிக்காக டிராமாவா?

அதாவது, அவரது அம்மாவின் பெயரில் ஏழைகளின் பசியை போக்கும் வகையில் புதிய அன்னதான விருந்து என்ற சமூக திட்டத்தை தொடங்கியுள்ளார். கண்மணி என்ற அன்னதான விருந்து சமூக திட்டத்தை ஏழைகளுக்காக தொடங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இது வசதி படைத்தவர்களுக்கான உணவுகள் ஏழைகளுக்கும் எளிதில் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. உணவானது அனைவரின் பசியையும் தீர்த்து, முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வர வேண்டும் என்பதே இதன் முதன்மையான இலக்கு.

முதல் முறையாக கட்டிய வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றும் ராகவா லாரன்ஸ் – தரமான கல்வி கொடுக்க திட்டம்!

இந்தத் திட்டத்தை, நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தொடங்கி வைத்ததில் தனக்கு மகிழ்ச்சி என்று லாரன்ஸ் தெரிவித்துள்ளார். அவர்கள் பலவிதமான உணவுகளை விருப்பத்துடன் உண்டது தனக்கு மிகுந்த மனநிறைவை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைவரின் அன்போடும் ஆதரவோடும், ஏழைகளின் பசியையும் தேவைகளையும் பூர்த்தி செய்யும் இந்தச் சேவையை மனநிறைவுடன் தொடர்ந்து செய்வேன் என்று லாரன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…