தளபதி எண்ட்ரி; மக்களுக்காக களமிறங்கும் ஜன நாயகன் – நவம்பர் 8 என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Jana Nayagan First Single : தளபதி விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் டிராக் குறித்து படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அது என்ன என்று பார்க்கலாம்.

ஜன நாயகன் முதல் பாடல்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கி முழு நேர அரசியல்வாதியாக மாறியுள்ளார். வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள விஜய் இனிமேல் சினிமாவில் நடிக்கப்போதிவில்லை என்று அறிவித்து தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம்
அஜித்தின் மாஸ் இயக்குநரான ஹெச் வினோத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், ரெபா மோனிகா ஜான், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், ரேவதி, நிழல்கள் ரவி, பாபா பாஸ்கர், டீஜே அருணாச்சலம் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு அடுத்த ஆப்பு ரெடி; சிபிசிஐடிக்கு வழக்கை மாற்ற செல்லும் ஜாய் கிரிசில்டா!
ஹெச் வினோத், பூஜா ஹெக்டே
விஜய்யின் கடைசி படம் மற்றும் அரசியல் பயணம் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த படம் அரசியல் கதை கொண்ட படமாக எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இப்போது படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.
கூட்டத்திற்கு நடுவே தனி ஒருவனாய் தளபதி; 'ஜனநாயகன்' புதிய போஸ்டர் வெளியானது!
ஜன நாயகன் முதல் சிங்கிள் டிராக்
இதில் விஜய் மட்டும் கூட்டத்திற்கு நடுவில் நின்று கொண்டிருப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும் படக்குழுவினர் புதிதாக ஒரு போஸ்டரை வெளியிட்டு புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதன்படி வரும் 8ஆம் தேதி ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாக இருக்கிறது என்று அறிவித்துள்ளது.
Thalapatheeee 🔥
Entryyy from Nov 8th #Thalapathy@actorvijay sir @KvnProductions#HVinoth@hegdepooja@anirudhofficial@thedeol@_mamithabaiju@Jagadishbliss@LohithNK01@RamVJ2412@TSeries#JanaNayagan#JanaNayaganPongal#JanaNayaganFromJan9pic.twitter.com/ofhWzvzyRx— KVN Productions (@KvnProductions) November 6, 2025
இந்தப் பாடல் தளபதி விஜய்யின் எண்ட்ரி பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் மீது அடுத்தடுத்து விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சிங்கிள் டிராக் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அரசியல் பிரபலங்களிடையே அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.