- Home
- Cinema
- ஜனநாயகன் ரீலீஸ் ஒத்திவைப்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. அதிர்ச்சியில் உறைந்த தளபதி ரசிகர்கள்!
ஜனநாயகன் ரீலீஸ் ஒத்திவைப்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. அதிர்ச்சியில் உறைந்த தளபதி ரசிகர்கள்!
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் வரும் 9ம் தேதி 39 நாடுகளில் வெளியாகாது என்றும் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

ஜனநாயகன் வெளியீடு ஒத்திவைப்பு
ஐரோப்பிய நாடுகளில் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி (நாளை மறுநாள்) வெளியாகாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 9ம் தேதி வெளியாக இருந்த ஜனநாயகன் திரைப்படம் ஒத்திவைக்கப்படுவதாக ஐரோப்பிய நாடுகளில் அப்படத்தை வெளியிடும் ஆர்எப்டி பிலிம்ஸ் (RFT Flims) நிறுவனம் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
39 நாடுகளில் ஒத்திவைப்பு
அதாவது ஜெர்மனி, அயர்லாந்து, போர்ச்சுக்கல், போலந்து, நார்வே, ஸ்பெயின், பிரான்ஸ், ஸ்வீடன், அயர்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 39 நாடுகளில் வரும் 9ம் தேதி திட்டமிட்டபடி ஜனநாயகன் வெளியாகாது என்றும் ஒத்திவைக்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை வாரியம் இன்னும் சென்சார் சர்டிபிகேட் கொடுக்கவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதி (நாளை மறுநாள்) தமிழகம் உள்பட உலகமெங்கும் வெளியாக இருந்தது. ஆனால் மத்திய தணிக்கை வாரியம் இந்த படத்துக்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. பல நாட்களுக்கு முன்பே விண்ணப்பித்தும் சென்சார் சர்டிபிகேட் வழங்காததால் இதை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
தீர்ப்பு தேதி என்ன?
''டிசம்பர் 18ம் தேதியே சென்சாருக்கு விண்ணப்பித்தும் சான்றிதழ் கொடுக்க மறுக்கிறார்கள். உறுப்பினர் ஒருவர் புகார் கொடுத்தார் என்பதற்காக சட்ட விதிகளை காற்றில் பறக்க விட்டு சென்சார் தர மறுக்கிறார்கள். இந்த படத்துக்காக 500 கோடி முடக்கி விட்டோம். நாளை மறுநாள் திட்டமிட்டபடி ரீலீஸ் ஆக வேண்டும்'' என படத்தயாரிப்பு நிறுவனம் வாதத்தை முன்வைத்தது.
தணிக்கை வாரியம் தனது வாதத்தில், ''படத்தை மறு ஆய்வு செய்ய தணிக்கை குழுவுக்கு அதிகாரம் உள்ளது. மறு ஆய்வு செய்த பின்பு சென்சார் சர்டிபிகேட் வழங்கப்படும்'' என்று தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வரும் 9ம் தேதி இறுதி தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

