MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Moon Transit in Scorpio
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • 4 வாரம் டைம் வேணும்.... ஜனநாயகன் ரிலீசுக்கு செக் வைக்கும் சென்சார் போர்டு - கோர்ட் எடுக்கப்போகும் முடிவு என்ன?

4 வாரம் டைம் வேணும்.... ஜனநாயகன் ரிலீசுக்கு செக் வைக்கும் சென்சார் போர்டு - கோர்ட் எடுக்கப்போகும் முடிவு என்ன?

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கில், தணிக்கை குழு மேலும் 4 வாரம் அவகாசம் கேட்டுள்ளதால் அப்படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 07 2026, 04:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jana Nayagan Censor Issue
Image Credit : X

Jana Nayagan Censor Issue

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் ரிலீஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வர, படத்திற்கான சென்சார் சான்றிதழ் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. டிசம்பர் மாதமே ஜனநாயகன் படத்திற்கான சென்சார் வேலைகள் தொடங்கி நடைபெற்று வந்திருக்கிறது. ஆனால் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி சான்றிதழ் வழங்காமல் சென்சார் போர்டு முட்டுக்கட்டை போட்டு உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஜனநாயகன் பட வழக்கு
Image Credit : X

ஜனநாயகன் பட வழக்கு

ஜனநாயகன் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் அப்படத்திற்கு விரைவில் சென்சார் வழங்க உத்தரவிட வேண்டும் என தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், புகார் அளித்தது யார் என்பதை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை இன்று ஒத்தி வைக்கப்பட்டது.

Related Articles

Related image1
ஜனநாயகன் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய பராசக்தி... ட்ரெய்லரிலேயா SK-விடம் அடிவாங்கிய விஜய்..!
Related image2
ஜனநாயகன் முதல் விமர்சனம் : விஜய்யின் மாஸ் விருந்து டேஸ்டா? வேஸ்டா?
34
ஒன்றிய அரசு தரப்பு வாதம்
Image Credit : X

ஒன்றிய அரசு தரப்பு வாதம்

இந்த நிலையில் இன்று மாலை மீண்டும் ஜனநாயகன் படத்தின் சென்சார் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே படத்தைப் பார்த்த சென்சார் குழு ஒருமித்த கருத்து தெரிவிக்காததால் புதிதாக ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து மீண்டும் சென்சார் செய்ய லாம் என வாதிட்ட ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞர், அதற்காக நான்கு வாரம் அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

44
ஜனநாயகன் தரப்பு வாதம்
Image Credit : X

ஜனநாயகன் தரப்பு வாதம்

இதற்கு பதில் வாதம் முன்வைத்த ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனமான கே வி என் தரப்பு, இதற்கு முன்னர் படம் பார்த்த ஐந்து பேர் கொண்ட குழுவில் நான்கு பேர் சென்சார் சான்றிதழ் வழங்க ஒத்துக்கொண்ட நிலையில், ஒருவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்க உத்தரவிடுமாறு அவர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், நாளை அல்லது ஜனவரி 9-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜன நாயகன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rashmika : நேஷனல் அவார்டை தட்டித்தூக்க ரெடியான ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா... பிரம்மாண்டமாக உருவாகும் பாடகியின் பயோபிக்
Recommended image2
Vaali : யுவன் கொடுத்த சவாலான டியூன்... இது எனக்கு ஜுஜுபி மாதிரினு சொல்லி வாலி கொடுத்த சூப்பர் ஹிட் பாட்டு..!
Recommended image3
விஜய் - அஜித் விலகியதால் அதிர்ஷ்ட காற்று: ஒரே ஆண்டில் ரூ.1,000 கோடி வசூல்? பாக்ஸ் ஆபீஸில் வரலாறு படைப்பாரா சூர்யா!
Related Stories
Recommended image1
ஜனநாயகன் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய பராசக்தி... ட்ரெய்லரிலேயா SK-விடம் அடிவாங்கிய விஜய்..!
Recommended image2
ஜனநாயகன் முதல் விமர்சனம் : விஜய்யின் மாஸ் விருந்து டேஸ்டா? வேஸ்டா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved