Vijay: 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விருதுகளை வழங்கும் தளபதி விஜய் - எவ்வளவு செலவு தெரியுமா?
மாணவர்களுக்கு விருது வழங்கும் நடிகர் விஜய்யின் கல்வி விருது விழா நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் எவ்வளவு செலவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெறுகிறது.
இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் சுமார் ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர். அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குகிறார்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற உள்ளது. இது நடிகர் விஜயின் அரசியல் பயணத்துக்கு அச்சாரமாக இருக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாணவர்களுக்கு விருது வழங்கும் நடிகர் விஜய்யின் கல்வி விருது விழா நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் 2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக இந்த நிகழ்ச்சி அரங்கத்திற்கு வாடகை மட்டும் 40 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. காலை, மதிய உணவு ஏற்படும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வெளியூரில் இருந்து வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்குவதற்கான மண்டப செலவு அனைத்தையும் விஜய் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு மக்கள் நலப்பணி திட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், இந்த விருது வழங்கும் விழா நடிகர் விஜயின் அரசியல் ஆசைக்கு வித்திடுமா ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.