ஜவான் கூட்டணியில் இணைந்தார் விஜய்... அட்லீ, ஷாருக்கான் உடன் தளபதி எடுத்துக்கொண்ட மெர்சல் போட்டோஸ் இதோ
Atlee : இயக்குனர் அட்லீயின் பர்த்டே பார்ட்டியில் நடிகர்கள் விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். முதல்படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த அட்லீ, அடுத்தடுத்து கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் விஜய் படங்கள்.
ராஜா ராணி படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களைக் கொடுத்தார் அட்லீ. இதன்மூலம் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் லிஸ்ட்டிலும் இணைந்தார். இதன்பின்னர் அட்லீக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் ஷாருக்கானின் ஜவான் படம். இப்படம் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக எண்ட்ரி கொடுத்துள்ளார் அட்லீ.
தற்போது ஜவான் படத்தின் ஷூட்டின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஷாருக்கான் தயாரித்தும் வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள ஆதித்ய ராம் பிலிம் ஸ்டூடியோவில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... சூர்யா - ஜோதிகா பிஃட்னஸுக்கு காரணம் இவர் தானா? ட்ரைனருடன் ஜோடியாக கொடுத்த கூல் போஸ்..!
இந்நிலையில், இயக்குனர் அட்லீ சமீபத்தில் தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி சென்னையில் பர்த்டே பார்ட்டி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார். இதில் நடிகர்கள் விஜய், ஷாருக்கான் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது இருவருடனும் அட்லீ எடுத்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அட்லீ, ‘இதைவிட வேறென்ன வேணும்’ என பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி அட்லீ இயக்கிவரும் ஜவான் படத்தில் நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக கடந்த மாதம் செய்திகள் வெளியான நிலையில், தற்போது அட்லீ, ஷாருக்கான் உடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் மூலம் அவர் ஜவானில் கெஸ்ட் ரோலில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மீண்டும் அதிர்ச்சி.. திடீர் என ஏற்பட்ட பிரச்சனை..! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா!