மீண்டும் அதிர்ச்சி.. திடீர் என ஏற்பட்ட பிரச்சனை..! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா!

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் உடல்நலம் தேறி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

shocking director bharathiraja again admitted for hospital

பழம்பெரும் இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் தான் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சுமார் 15 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

81 வயதிலும்,  மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் திரைப்பட பணிகளில் கவனம் செலுத்தி வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு, பாரதி ராஜாவின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவித்தது. இந்நிலையில் கடந்த மாதம் ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி, இவருக்கு திடீர் என வீட்டில் இருக்கும் போது, இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதித்த ,மருத்துவர்கள், இயக்குனர் பாரதிராஜாவுக்கு, அஜீரணக்கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரல் சளி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

shocking director bharathiraja again admitted for hospital

அந்த தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த போதும், உடல்நிலையில் போதிய அளவு முன்னேற்றம் இல்லாத காரணத்தால்... மேல்சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள  எம்.ஜி.எம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கொடுக்கப்பட்ட உயர்தர சிகிச்சைகள் மூலம் விரைவாகவே பாரதிராஜா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சுமார் 10 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பாரதிராஜா பின்னர், நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவர்கள் இவரை டிஸ்சார்ஜ் செய்தனர்.

shocking director bharathiraja again admitted for hospital

பின்னர் சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள, தன்னுடைய வீட்டில் பாரதிராஜா ஓய்வு எடுத்து வந்த நிலையில், இவரை முதல்வர் ஸ்டாலின் உட்பட பல பிரபலங்கள் நேரில் சந்தித்து... நலம் விசாரித்தனர். இந்நிலையில் மீண்டும் ஏற்பட்ட  திடீர் உடல்நல குறைவு காரணமாக, பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இது குறித்து வெளியாகி உள்ள தகவலில், சிறுநீரகக் குழாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இயக்குனர் பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

shocking director bharathiraja again admitted for hospital

இதற்கான சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இன்னும் சில தினங்களில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவ வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios