ரசிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட தளபதி... விஜய் - சங்கீதாவின் கியூட்டான லவ் ஸ்டோரி பற்றி தெரியுமா?
நடிகர் விஜய், அவரது மனைவி சங்கீதாவை காதல் திருமணம் செய்துகொண்டது குறித்தும், அவரது கியூட்டான லவ் ஸ்டோரி குறித்தும் தற்போது பார்க்கலாம்.
vijay, sangeetha
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறி இன்று பல கோடி ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் ஒருவராக மாறி இருக்கிறார். விஜய்யின் இந்த வளர்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டது அவரது பெற்றோராக இருந்தாலும், அவரின் இந்த பயணத்தில் முக்கிய பங்காற்றியது அவரது மனைவி சங்கீதா தான் என்பது பலரும் அறியாத உண்மை. நடிகர் விஜய் - சங்கீதா ஜோடியின் காதல் கதையை பற்றி தற்போது பார்க்கலாம்.
நடிகர் விஜய்க்கு முதன்முதலில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் தான் பூவே உனக்காக. இந்தப் படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையை மட்டுமின்றி பர்சனல் வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஏனெனில் இந்தப் படத்தை பார்த்துவிட்டு தான் விஜய்யை சந்திக்க அவரின் தீவிர ரசிகையான சங்கீதா, லண்டனில் இருந்து கிளம்பி வந்தாராம்.
vijay, sangeetha
சங்கீதாவின் பூர்வீகம் இலங்கை, அவரது தந்தையின் பிசினஸிற்காக லண்டனில் செட்டில் ஆன தமிழ் குடும்பம் தான் சங்கீதாவின் பேமிலி. லண்டனில் இருக்கும் போது பூவே உனக்காக படம் பார்த்த சங்கீதாவுக்கு விஜய் மீது காதல் ஏற்பட்டு, அவரை சந்தித்தே ஆகவேண்டும் என அடம்பிடித்து தன்னுடைய அக்காவை அழைத்துக் கொண்டு இந்தியா வந்துவிட்டாராம் சங்கீதா.
தன்னைப் பார்ப்பதற்காக கடல் தாண்டி வந்திருக்காங்களா என்கிற ஆச்சர்யத்துடன் தான் சங்கீதாவை முதன்முதலில் சந்தித்துள்ளார் விஜய். தன்னைப் பார்க்க லண்டனில் இருந்து ரசிகையாக வந்த சங்கீதாவை, தன்னுடைய வீட்டுக்கு அழைத்து விருந்தும் கொடுத்துள்ளார் விஜய். அப்போது விஜய்யின் பெற்றோருக்கு சங்கீதாவை மிகவும் பிடித்துப் போக, அவரிடம் நேரடியாவே திருமணம் பற்றி கேட்டுவிட்டாராம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.
vijay, sangeetha
ஒரு ரசிகைக்கு இதைவிட என்ன வேண்டும் சட்டென அவரும் ஓகே சொல்ல, உடனடியாக லண்டனுக்கு சென்று சங்கீதாவின் பெற்றோரை பார்த்து பேசி முடித்த எஸ்.ஏ.சி, திருமண தேதியையும் குறித்துவிட்டாராம். இதையடுத்து 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ந் தேதி விஜய் - சங்கீதா ஜோடிக்கு திருமணம் ஆனது. இவர்களின் திருமணம் இந்து முறைப்படி மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. பல திரையுலக பிரபலங்களும் இவர்களது திருமணத்தில் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்... ரூ.400 கோடிக்கு மேல் சொத்து... விதவிதமான சொகுசு கார்கள் என ராஜ வாழ்க்கை வாழும் விஜய் பற்றிய ஆச்சர்ய தகவல்கள்
vijay, sangeetha
இதையடுத்து 2000-ம் ஆண்டு விஜய் - சங்கீதா ஜோடிக்கு சஞ்சய் என்கிற மகன் பிறந்தார். இந்த சமயத்தில் தான் விஜய் நடித்த பிரியமானவளே திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஜய் - சிம்ரன் ஜோடிக்கு நிறைய குழந்தைகள் பிறப்பது போன்ற சீன் இடம்பெற்று இருக்கும். இதில் விஜய் ரொம்பவே குஷியாக நடித்திருப்பார். அந்த டைம்ல தான் விஜய்க்கு அவருடைய மூத்தமகன் சஞ்சய் பிறந்தாராம். அந்த சந்தோஷ தருணத்தை தான் அப்பட பாடலில் டான்ஸ் ஆடி விஜய் கொண்டாடினாராம்.
விஜய் மகனுக்கு சஞ்சய் என பெயர் வைக்கப்பட்டதன் பின்னணியின் ஒரு சுவாரஸ்ய தகவல் உள்ளதாம். சங்கீதாவில் இருக்கும் San என்பதையும் விஜய்யையில் இருக்கும் jay என்பதையும் சேர்த்து தான் அவருக்கு சங்கீதா என பெயரிட்டார்களாம். சிறுவயதிலேயே தங்கையை இழந்த நடிகர் விஜய்க்கு இரண்டாவதாக திவ்யா சாஷா என்கிற பெண் குழந்தை கடந்த 2005-ம் ஆண்டு பிறந்தது.
vijay, sangeetha
விஜய்யின் மனைவி சங்கீதா தான் அவரின் முதல் விமர்சகராம். ஒரு படத்தை பார்த்ததும் அதும் ஓடும், ஓடாது என்பதை ஓப்பனாக சொல்லிவிடுவாராம் சங்கீதா. அதேபோல் விஜய் எந்த நிகழ்ச்சியிலோ, அல்லது பட விழாக்களில் கலந்துகொண்டாலோ, அவர் அணியும் உடையை அவரது மனைவி சங்கீதா தான் தேர்வு செய்வாராம்.
சங்கீதாவுக்கு நடிகர் விஜய் முதன்முதலில் வைர மோதிரம் ஒன்றை பரிசாக அளித்தாராம். திருமணத்துக்கு முன் லண்டனில் நடந்த நிச்சயதார்த்தத்தில் தான் இந்த வைர மோதிரத்தை சங்கீதாவுக்கு கிப்ட் ஆக கொடுத்தாராம் விஜய். அதேபோல் சங்கீதாவும் விஜய்க்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்கு சலச்சதே இல்லையாம்.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸ் நாயகனுக்கு பாலிடிக்ஸ் ஆசை எப்படி வந்தது? விஜய்யின் விஸ்வரூப அரசியல் - ஒரு பார்வை