விஜய்க்கே இந்த நிலைமையா? ஓடிடியில் விலை போகாத தளபதி 69; காரணம் என்ன?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் தனுஷ் மற்றும் விஜயின் படங்கள் கூட இன்னும் ஓடிடியில் விலை போகவில்லை என பிரபலம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

OTT Platform Problems
சமீப காலமாக, திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கிறதோ அதே போல் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஒரு சில ரசிகர்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் போது படத்தை பார்த்து கொள்ளலாம் என்கிற மனநிலைக்கு வந்து விட்டனர். இதற்கு காரணம், ஒரு படத்தை திரையரங்கில் சென்று பார்க்க, குறைந்தபட்சம் 500 முதல் 700 வரை செலவாகலாம். குடும்பத்தோடு சென்றால் 2000 கூட செலவாகும்.
More Audience Interested to Watch OTT Movies
இது ஒரு நடுத்தர குடும்பத்திற்கு கொஞ்சம் அதிகம் என கூறலாம். எனவே தான் ரசிகர்கள் பலர் ஓடிடியில் படம் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். முன்பெல்லாம் அதிக பட்சம் 4,5 ஓடிடி தளங்கள் மட்டுமே இருந்த நிலையில், ஓடிடி-யில் வெளியாகும் படங்களுக்கு வரவேற்பு கிடைப்பதால் கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட புதிய ஓடிடி தளங்கள் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் ஓடிடியில் முன்னணி நடிகர்களின் படங்கள் கூட, மிகவும் குறைவான தொகை கொடுத்தே வாங்க படுவதாக, பிரபல இயக்குனர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
ஜன நாயகன் படத்திற்கு விஜய் என்ன சொன்னார்? ஓபனாக பேசிய இயக்குநர் வினோத்!
Chitra Lakshmanan Interview
இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது, ஓடிடியில் பாதிப்பு குறித்து ஏற்கனவே பலமுறை பேசியிருக்கிறோம். அண்மையில் ஒரு முக்கியமான தயாரிப்பாளரிடம் பேசியபோது, அவர் கூறிய தகவல்கள் கேட்க்கும் ரசிகர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது. என்னென்ன படங்கள் எல்லாம் வியாபாரம் ஆகாமல் இருக்கிறது? என்பது பற்றிய தகவலை தான் இந்த பேட்டியில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Actor Dhanush 4 movies Not Sold out in Digital
பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் ஓடிடியில் விலை போவதில் எந்த பிரச்சனையும் இல்லை என கேள்வி பட்டிருப்போம். அதே போல் பெரிய படங்கள் ஓடிடியில் நல்ல விலைக்கு வாங்கிக் கொள்ளப்படுகிறது, ஆனால் சிறு பட்ஜெட் படங்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறது என தயாரிப்பாளர்கள் கூறுவார்கள். ஆனால் இப்போது தனுஷ் ஏறக்குறைய சுமார் நான்கு படங்களில் பணியாற்றி வருகிறார். முன்பெல்லாம் தனுஷ், விஜய், போன்ற நடிகர்களின் படங்கள் அன்னோன்ஸ்மென்ட் வந்தாலே, பாம்பேவில் இருந்து ஹிந்தி டப்பிங் உரிமையை உடனடியாக வாங்கி விடுவார். அதே போல் அடுத்தடுத்து பல ஓடிடி நிறுவனங்களில் இருந்து படத்தை கைப்பற்ற பேச்சு வார்த்தைகள் நடக்கும். ஆனால் நடிகர் தனுஷின் நான்கு படங்களும் ஓடிடியில் விலை போகாமல் உள்ளது. இந்த தகவல் கேட்பதற்கே ஆச்சர்யமாக இருந்தது.
ஜன நாயகன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சாட்டை துரைமுருகன்; பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்!
Mohan Lal Movie
அதேபோல் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பரோஸ்' திரைப்படம் சுமார் 40 கோடிக்காவது ஓடிடியில் விலை போய் இருக்க வேண்டும். ஆனால் 20 கோடிக்கு மட்டுமே விலை போய் உள்ளது. பாதிக்கு பாதி விலை விலை தான் கேட்கப்பட்டது. இதில் இருந்து எந்த அளவுக்கு ஓடிடியின் தாக்கம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
Thalapathy 69 Also Not Sold
மோஸ்ட் பாப்புலர் ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். அவருடைய படங்களுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அவருடைய 69 ஆவது திரைப்படமே இன்னும் வியாபாரமாகாமல் உள்ளது என்பதுதான் உண்மை. அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது, அமரன் திரைப்படமும் வியாபாரம் ஆகாமல் இருந்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் அமரன் திரைப்படம் ஓடிடி தலத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. படக்குழு எதிர்பார்க்க கூடிய தொகை கிடைக்காத காரணத்தால் தான், பல படங்கள் ஓடிடி-யில் வெளியாகாமல் உள்ளது என கூறியுள்ளார் சித்ரா லட்சுமணன்.
சாட்டையை சுழற்றும் விஜய்; சரவெடியாய் வந்த ‘ஜன நாயகன்’ செகண்ட் லுக்