ஜன நாயகன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சாட்டை துரைமுருகன்; பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்!
Sattai Duraimurugan on Thalapathy Vijay's Jana Nayagan First Look Poster : நாட்டின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 69 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் அதைப் பற்றி நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.
Thalapathy 69 Movie Title and First Look Poster, Jana Nayagan
கடந்த சில நாட்களாக விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 69 படத்தின் டைட்டில் பற்றி தான் பேச்சு அடிபட்டு வந்தது. மேலும், விஜய்யின் ஃபர்ஸ்ட் படமான நாளைய தீர்ப்பு படத்தின் டைட்டிலாக கூட இருக்கலாம் என்று சொல்லப்பட்டது. இதற்கு எல்லாம் ஒரே காரணம் விஜய்யின் அரசியல் வருகை தான். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநில மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி காட்டினார். இதையடுத்து பரந்தூரில் விமான நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்களுக்கு ஆதரவாக மக்களோடு மக்களாக நேரில் சென்று குரல் கொடுத்தார்.
Thalapathy 69 Movie Title, Jana Nayagan
ஏற்கனவே இந்தப் படம் முழுக்க முழுக்க விஜய்க்கான படம் என்று சொல்லப்பட்டது. அதோடு, விஜய்யின் அரசியல் வருகைக்கு இந்தப் படம் சிறந்த படமாக இருக்கும் என்று சொல்லப்பட்டது. மேலும், தளபதி 69 படத்தில் விஜய்யின் அரசியல் வசனங்கள் இருக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்ட நிலையில் இப்போது படத்தோட டைட்டிலே அரசியல் பேசும் ஒரு டைட்டிலாக அமைந்துவிட்டது. நாட்டின் 76ஆவது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் தளபதி 69 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
Jana Nayagan Second Look Poster, Thalapathy Vijay
அதன்படி படத்திற்கு ஜன நாயகன் என்று டைட்டில் வைக்கப்பட்டது. தளபதி விஜய் தனது முதல் அரசியல் எதிரியாக கருதுவது ஊழல் ஆட்சி நடத்தி வரும் ஆளும் திமுகவை தான். 2ஆவது மத்தியில் ஆளும் கட்சியை மறைமுகமாவும், நேரடியாகவும் சாடி வந்தார். இந்த நிலையில் தான் அவருடைய 69ஆவது படத்தில் டைட்டில் இப்படி ஒரு மாஸான டைட்டிலாக அமைந்துவிட்டது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் இப்போது அந்த போஸ்டரில் யூடியூபரும், நாம் தமிழர் கட்சியின் உறுப்பினருமான சாட்டை துரைமுருகனின் போஸ்டர் இடம் பெற்றிருப்பதாக நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர். ஏற்கனவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான், விஜய்யின் அரசியலை விமர்சித்து வந்த நிலையில் சாட்டை துரைமுருகனும் தன் பங்கிற்கு விக்கிரவாண்டி அரசியல் மாநாட்டை விமர்சனம் செய்தார்.
Thalapathy 69 Movie First Look Poster
அப்படியிருக்கும் போது எப்படி அவருடைய போஸ்டர் ஜன நாயகன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம் பெற்றிருக்கிறது என்றெல்லாம் கேள்வியும், விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தான் இப்போது ஜன நாயகன் 2ஆவது லுக் போஸ்டரும் வெளியாகியிருக்கிறது. இதில், அவர் சாட்டையை சுழற்றுவது போன்ற போஸ்டர் இடம் பெற்றிருக்கிறது. இதற்கு பல அர்த்தங்களை சொல்லலாம். எம்ஜிஆர் நடித்த எங்கள் வீட்டு பிள்ளை படத்தில் வரும் நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்ற பாடலில் அவர் சாட்டையால் தப்பு செய்தும் நம்பியாரை அடிப்பார். அது போன்று ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் விஜய், ஊழல்வாதிகளை தனது சாட்டையால் திருத்த போகிறார் என்று சொல்லலாம்.
Vijays Thalapathy 69, Jana Nayagan, Tamilaga Vettri Kazhagam
சில தினங்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவரான அண்ணாமலை அண்ணாபல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு தன்னை சாட்டையால் அடித்துக் கொண்டார். அதை குறிப்பிடும் வகையில் கூட விஜய் கையில் சாட்டை வைத்திருக்கலாம். இப்படி பல காரணங்கள் ஒரு போஸ்டருக்கு பின்னால் மறைந்திருக்கிறது. உண்மையான காரணத்தை ஜன நாயகன் படக்குழு தெரிவித்தால் மட்டுமே தெரியவரும்.
Thalapahy 69, Tamilaga Vettri Kazhagam, Jana Nayagan
அஜித்தின் மாஸான இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் தனது 69ஆவது படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், பிரியாமணி, நரைன், மோனிஷா பிளெஸி, மமிதா பைஜூ, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜன நாயகன் படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.