தளபதி 67-ல் ரோலெக்ஸ்... மீண்டும் நேருக்கு நேர் மோத உள்ள விஜய் - சூர்யா?
Thalapathy 67 : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனராஜ், அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணியில் முழுவீச்சில் இறங்கி உள்ளார் லோகேஷ். இப்படத்தில் அவருடன் இயக்குனர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வட்டி ஆகியோரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
தளபதி 67 கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக மலையாள நடிகர் பிருத்விராஜ், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் தயாரிப்பாளருடன் அடுத்தடுத்து 2 படங்கள்... ரஜினியின் கால்ஷீட்டை கொத்தாக தட்டித்தூக்கிய லைகா
இந்நிலையில், தற்போது இந்த படத்தில் மெயின் வில்லனாக நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இப்படத்தையும் தனது LCU-வின் கீழ் எடுக்க லோகேஷ் முடிவு செய்துள்ளதாகவும், அதனால் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரமும் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக விக்ரம் படத்தில் சூர்யா ரோலெக்ஸாக நடித்த 5 நிமிட காட்சிக்கே அரங்கம் அதிர்ந்த நிலையில், தற்போது விஜய்க்கு வில்லனாக அவர் நடிக்க உள்ளதாக பரவும் தகவல் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. விஜய்யும் சூர்யாவும் ஏற்கனவே நேருக்கு நேர், பிரெண்ட்ஸ் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஆயிஷா முதல் ஜிபி முத்து வரை... பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் யார்... யார்? - முழு விவரம்