- Home
- Cinema
- இந்தி படங்களை ஓரங்கட்டி... மீண்டும் பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்கும் தென்னிந்திய திரைப்படம்
இந்தி படங்களை ஓரங்கட்டி... மீண்டும் பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்கும் தென்னிந்திய திரைப்படம்
பாலிவுட் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும், ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப் 2, விக்ரம் போன்ற தென்னிந்திய மொழி படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகி அமோக வரவேற்பை பெற்றன.

பாலிவுட் திரையுலகம் இந்த ஆண்டு கடும் சரிவை சந்தித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகள் மாதம் ஒரு ஹிட் படங்களையாவது குறையாமல் கொடுத்துவிடும் சூழலில், இந்தி திரையுலகம் மட்டும் வரிசையாக பிளாப் படங்களை கொடுத்து வருகிறது. அங்கு இந்த வருடம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்ற படம் என்றால் அது காஷ்மீர் பைல்ஸ் படம் மட்டும் தான்.
அதைத் தவிர கடந்த 8 மாதங்களில் அங்கு ரிலீசான படங்கள் பெரும்பாலானவை படு தோல்வியை சந்தித்துள்ளன. அதேசமயம் தென்னிந்திய படங்களுக்கு அங்கு இந்த ஆண்டு அதிக மவுசு உள்ளது. ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப் 2, விக்ரம் போன்ற தென்னிந்திய மொழி படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகி அமோக வரவேற்பை பெற்றன.
இதையும் படியுங்கள்... மேலும் படிக்க
அந்த லிஸ்டில் தற்போது புதிதாக இணைந்துள்ள படம் தான் கார்த்திகேயா 2. நிகில் சித்தார்த்தா இயக்கத்தில் உருவான தெலுங்கு படமான இது, இந்தியிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப் 2 போன்ற படங்களுக்கு கிடைத்த வரவேற்பை போல் இப்படத்திற்கு இந்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் இந்தியில் மட்டும் ரூ.50 கோடி வசூலை நெருங்கி வருகிறது.
இப்படம் இந்த அளவுக்கு வரவேற்பை பெறுவதற்கு முக்கிய காரணம், இந்த மாதம் இந்தியில் வெளியான பெரிய படங்களான அமீர்கானின் லால் சிங் சத்தா மற்றும் அக்ஷய் குமாரின் ரக்ஷா பந்தன் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன. அதேபோல் நேற்று வெளியான விஜய் தேவரகொண்டாவின் லிகர் படமும் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருவதால், வட இந்தியாவில் கார்த்திகேயா 2 படத்தின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது.
இதையும் படியுங்கள்... கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... லைட்டாக இடையை காட்டி குஷி ஜோதிகாவுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன்!