பணிப்பெண்ணை வைத்து பலான வேலை பார்த்த நடிகை டிம்பிள் ஹயாதி கைது?
Dimple Hayathi: நடிகை டிம்பிள் ஹயாதி, தனது வீட்டில் பணிபுரிந்த பெண் அளித்த புகாரால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தன்னை மோசமாக நடத்தியதாகவும், ஆபாசமாக வீடியோ எடுக்க முயன்றதாகவும் அந்தப் பெண் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிம்பிள் ஹயாத்தி
தெலுங்கு நடிகையான டிம்பிள் ஹயாத்தி, கடந்த 2017-ம் ஆண்டு டோலிவுட்டில் வெளியான கல்ஃப் என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான தேவி 2 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். பின்னர் விஷால் ஜோடியாக வீரமே வாகை சூடும் ஆகிய படங்களில் டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார்.
சர்ச்சையில் சிக்கிய டிம்பிள் ஹயாத்தி
அதன் பிறகு திரைப்படங்களில் அதிகம் காணப்படவில்லை. பட வாய்ப்புகளும் வரவில்லை என்று தெரிகிறது. போட்டோஷூட்களில் பிஸியாக இருந்த அவர், இறுதியாக "ராமபாணம்" என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், டிம்பிள் புதிய வாய்ப்புகளுக்காக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்கிறார். சமீபத்தில், சர்வானந்திற்கு ஜோடியாக "போகி" என்ற படத்தில் டிம்பிள் ஒப்பந்தமாகியுள்ளார். சம்பத் நந்தி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்தப் படத்தின் மூலம் மீண்டும் பிஸியாகலாம் என்று நினைத்த நேரத்தில், அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்
அதாவது ஐதராபாத்தில் ஷேக்பெட் என்னும் இடத்தில் இருக்கும் வெஸ்ட்உட் அபார்ட்மென்ட்டில் டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது கணவர் வசித்து வருகின்றனர். அந்த வீட்டுக்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண் பிரியங்கா பீபர் கடந்த செப்டம்பர் 22ம் தேதி பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.
கைதாகிறார் டிம்பிள் ஹயாதி
வேலைக்கு சேர்ந்ததில் இருந்தே தன்னை நடிகை மோசமாக நடத்தினார், உணவு கூட சரியாக தரவில்லை என அந்த பெண் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். மேலும் தன்னை ஆபாசமாக வீடியோ எடுக்க முயற்சித்தாகவும் பகீர் தகவல் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 29ம் தேதி தான் பிரச்னை பெரிதாகி இருக்கிறது. வீட்டின் நாய் குரைத்துக்கொண்டே இருந்ததால் டிம்பிள் ஹயாதி மற்றும் அவர் கணவர் டேவிட் இருவரும் பிரியங்காவை படுமோசமாக திட்டினார்களாம். சண்டையில் தனது உடை கிழிக்கப்பட்டது எனவும் பிரியங்கா போலீசில் புகார் அளித்து இருக்கிறார். இந்த சம்பவம் பற்றி தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் டிம்பிள் ஹயாதி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

