MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ஜனநாயகன் ரிலீஸுக்கும் ஆப்பு..! விஜயை மொத்தமாக சோலியை முடிக்கப்பார்க்கும் திமுக..! துரத்தும் சிக்கல்கள்..!

ஜனநாயகன் ரிலீஸுக்கும் ஆப்பு..! விஜயை மொத்தமாக சோலியை முடிக்கப்பார்க்கும் திமுக..! துரத்தும் சிக்கல்கள்..!

 ரோகிணி திரையரங்கம் சூறையாடப்பட்டதை மறந்துவிடக்கூடாது. படம் பார்க்க வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. திரையரங்கில் பல தரப்பினரும் வர வாய்ப்பிருப்பதால் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என ஒரே இடத்தில் கூடி, மோசமான சூழல் உருவாகலாம்.

2 Min read
Author : Thiraviya raj
Published : Oct 03 2025, 03:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விஜய்யின் அரசியல் பின்னணியால் சிக்கல்
Image Credit : Asianet News

விஜய்யின் அரசியல் பின்னணியால் சிக்கல்

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் ஜனநாயகன் திரைப்படம், விஜயின் கடைசி படமாகவும், அரசியல் பிரவேசத்துக்கு முன்னோட்டமாகவும் இருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு அரசியல் அதிரடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது. ஆனால், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி, படத்தின் மையக்கரு, விஜய்யின் அரசியல் பின்னணி ஆகியவற்றால் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. அக்டோபர் மாதமே வெளியாக வேண்டிய இந்தப்படத்தை ஜனவரி 2026, பொங்கல் தினத்தில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. ஆனால், விஜயின் அரசியல் பிரவேசத்தால் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய வெளியீடு சரியாக இருக்கும் என்பதால் தேதி மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தடையாக மாறும் கரூர் கூட்ட நெரிசல்
Image Credit : our own

தடையாக மாறும் கரூர் கூட்ட நெரிசல்

விஜய்யின் தவெக பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்தப்படத்தை பயன்படுத்தப்படலாம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தின் போஸ்டர், டீசர்கள் அரசியல் தலைவராக விஜய்யை சித்தரிப்பதால், தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்புக்கும் உட்படுத்தப்படலாம். படத்தில் தவெக கொடி, சின்னம், பாடல்கள் இடம்பெறலாம் என ஊகங்கள் கிளம்பியுள்ளன. 

விஜய் ஒரு அரசியல் தலைவராகவும், போலீஸ் அதிகாரியாகவும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெளியானது. இதையெல்லாம் தாண்டி கரூரில் விஜயின் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட நெரிசல் பிரச்சினை ஜனநாயகன் படத்திற்கு பெரும் தடையாக மாறி இருக்கிறது. கரூர் விவகாரத்தைக் கூறி திமுகவின் ஈகோ சிஸ்டம் ஜனநாயகன் பட ரிலீஸிற்கு பெரும் சிக்கலை உருவாக்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

34
வன்முறைகள் நிகழ வாய்ப்பு
Image Credit : our own

வன்முறைகள் நிகழ வாய்ப்பு

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தால் ஜன நாயகன் படத்தின் இசை வெளியிட்டு விழாவை மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விழாவிற்கு 40,000 பேர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து திமுக ஆதரவாளன சூர்யா சேவியர், ‘‘ஜனநாயகன் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படத்தை ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் இருக்கிறது. இப்படத்தை தமிழ்நாட்டில் ஜனவரியில் திரையிட அனுமதிக்கக்கூடாது. தவெக நடவடிக்கைகள் அனைத்தும் கட்டுப்பாடற்றதாகவே இருக்கிறது. இது சாதாரண ஒரு கலைப் படைப்பு என்று கடந்துவிடமுடியாது. தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட படமாதலால் திட்டமிட்ட வன்முறைகள் நிகழ வாய்ப்பிருக்கிறது.

44
திரையரங்கங்கள் சூறையாடப்படலாம்.
Image Credit : Asianet News

திரையரங்கங்கள் சூறையாடப்படலாம்.

திரையரங்கங்கள் சூறையாடப்படலாம். ரோகிணி திரையரங்கம் சூறையாடப்பட்டதை மறந்துவிடக்கூடாது. படம் பார்க்க வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. திரையரங்கில் பல தரப்பினரும் வர வாய்ப்பிருப்பதால் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என ஒரே இடத்தில் கூடி, மோசமான சூழல் உருவாகலாம். தமிழ்நாடு முழுமையும் ஒவ்வொரு காட்சிக்கும், ஒவ்வொரு தியேட்டருக்கும் காவல்துறை பாதுகாப்பு அளித்துக் கொண்டிருப்பது இயலாத காரியம்.

எனவே சட்டமன்றத்தேர்தல் முடிந்த பிறகு மே மாதம் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கலாம். தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாளர்களுக்கு தவெக நடவடிக்கைகள் துணை போவதாக கரூர் உள்ளிட்ட சம்பவங்கள் மெய்ப்பிப்பதாக கருதமுடிகிறது. ஜனநாயகன் என்பதை விட பிணநாயகன் என்ற கருத்தும் மேலோங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Related Stories
Recommended image1
சுக்கு நூறான தவெகவின் நம்பிக்கை..! உங்கள் அரசியலுக்கு நீதிமன்றம்தான் கிடைத்ததா..? கடுப்பான நீதிபதிகள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved