- Home
- Cinema
- காந்தாரா சாப்டர் 1 படம் பார்க்க வந்த பெண்... தியேட்டரில் திடீரென சாமி ஆடியதால் பரபரப்பு..!
காந்தாரா சாப்டர் 1 படம் பார்க்க வந்த பெண்... தியேட்டரில் திடீரென சாமி ஆடியதால் பரபரப்பு..!
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் பார்க்க தியேட்டருக்கு வந்த பெண் ஒருவர் திடீரென சாமி ஆடியதால் பரபரப்பு நிலவியது.

Kantara Chapter 1 movie spiritual reaction
ஹாவேரி நகரில் உள்ள மாகாவி திரையரங்கில் 'காந்தாரா: சாப்டர் 1' திரைப்படத்தை பார்க்க வந்த ஒரு பெண், படத்தின் இரண்டாம் பாதியில் ரிஷப் ஷெட்டிக்கு தெய்வீக அருள் வரும் காட்சியைக் கண்டு, 'தன் மீது சாமி வந்தது போல்' ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை திரையரங்கில் இருந்த சில பார்வையாளர்கள் தங்கள் மொபைலில் படம்பிடித்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தியேட்டரில் சாமி ஆடிய பெண்
அந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் பலர், அந்த பெண் ஓவர் ஆக்டிங் செய்வதாக கிண்டலடித்து வருகிறார்கள். ஒரு சிலரோ, இதைப் பார்க்கும் போது கிரிஞ்சாக இருப்பதாகவும், தயவு செய்து இதுபோன்ற சீப் ஆன பப்ளிசிட்டி செய்ய வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஒரு சிலரோ காந்தாரா பார்க்க போய் அந்த பெண் காந்தாராவாகவே மாறிவிட்டார் என கிண்டலடித்து கமெண்ட் செய்துள்ளனர்.
Today at Haveri, during the screening of Kantara movie 🙏🕉️#KantaraChapter1 Divine Blockbuster 🔥#RishabShetty#Kantarapic.twitter.com/xyqyHGdr5k
— Pranooth Gowda (@pranooth_mp) October 2, 2025
ரிஷப் ஷெட்டி இயக்கிய 'காந்தாரா: சாப்டர் 1' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. அதிக டிக்கெட் விலை மற்றும் வெற்றிகரமான பிரீமியர் ஷோக்களால் பெரும் வசூலை ஈட்டி வருகிறது. கர்நாடகாவில் 350 திரையரங்குகளில் சுமார் 2,000 காட்சிகளுடன், முதல் நாளிலேயே 18 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. கர்நாடகாவை விட வட இந்தியாவில் தான் காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு இப்படம் 19 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தை ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் 120 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தில் ரிஷப் ஷெட்டி ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருக்கிறார். இப்படம் காந்தாரா முதல் பாகத்தின் ப்ரீக்வல் ஆக வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு விமர்சனங்களும் பாசிடிவ் ஆக வந்துள்ளதால், கேஜிஎஃப் 2-வை தொடர்ந்து 1000 கோடி வசூல் கிளப்பில் இணையும் படமாக காந்தாரா சாப்டர் 1 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.