இனி ஐட்டம் சாங்குக்கு ஆப்பு; அதிரடி உத்தரவால் கலக்கத்தில் டோலிவுட் - பின்னணி என்ன?
தெலுங்கு திரைப்படங்களில் பெண்களை தவறாக சித்தரிக்கும் நடன அசைவுகளுக்கு எதிராக தெலங்கானா மகளிர் ஆணையம் களத்தில் இறங்கியுள்ளது.

Telangana Women's Commission issues Warning Regarding Item Song : தெலுங்கு திரைப்படங்களில் பெண்களை தவறாக சித்தரிக்கும் நடன அசைவுகளுக்கு எதிராக விமர்சனம் எழுந்துள்ளது. தற்போது இந்த விஷயத்தில் தெலங்கானா மகளிர் ஆணையம் தலையிட்டுள்ளது. இதுபோன்ற பாடல்களும் காட்சிகளும் தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெலங்கானா மாநில மகளிர் ஆணையம் எச்சரித்துள்ளது. தெலங்கானா மாநில மகளிர் ஆணையத் தலைவர் சாரதா நெரேல்லா சமீபத்தில் பாடல்கள் குறித்து கவலை தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சில பாடல்களில் பயன்படுத்தப்படும் நடன அசைவுகள் ஆபாசமாகவும் பெண்களை அவமானப்படுத்துவதாகவும் ஆணையத்திற்கு பல புகார்கள் வந்துள்ளதாக அவர் அறிக்கையில் தெரிவித்தார். திரைப்படம் ஒரு சக்திவாய்ந்த ஊடகம் என்பதை கருத்தில் கொண்டு புகார்கள் கவலை அளிப்பதாகவும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
Sreeleela
அந்த செய்திக்குறிப்பில், "இந்த சூழ்நிலையில், திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடன இயக்குனர்கள் மற்றும் தொடர்புடைய குழுக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று மகளிர் ஆணையம் எச்சரிக்கிறது. பெண்களை இழிவுபடுத்தும் ஆபாச நடன அசைவுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த எச்சரிக்கையை மீறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. சினிமா துறையில் உள்ளவர்களுக்கு ‘தார்மீக பொறுப்பு' உள்ளது என்று சாரதா அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... புஷ்பா 2 கலெக்ஷன்ஸ் குறித்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!
Daaku Maharaj
"சமூகத்திற்கு நல்ல செய்திகளை வழங்கவும், பெண்களின் கண்ணியத்தை பாதுகாக்கவும் சினிமா துறைக்கு தார்மீக பொறுப்பு உள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை மனதில் வைத்து, சினிமா தொழில் சுய கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்" என்றும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தனிநபர்களும், சம்பந்தப்பட்ட அமைப்புகளும் பதிலளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Pushpa 2
முன்னதாக புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற கிஸ்ஸிக், பீலிங்ஸ் ஆகிய பாடல்களில் ஸ்ரீலீலா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆடிய நடன காட்சிகளும், டாக்கு மஹாராஜ் என்ற படத்தில் ஊர்வசி ரவுத்தேலாவின் பாடல் காட்சியும், ராபின் ஹூட் என்ற படத்தில் இடம்பெற்ற கில்மா பாடலுக்கு நடிகை கேடிகா ஷர்மாவின் கவர்ச்சிகரமான நடன அசைவுகள் காரணமாக சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பின்னரே மகளிர் ஆணையம் தலையிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படியுங்கள்... புஷ்பா படம் பார்த்து என் ஸ்கூல்ல பாதி பசங்க கெட்டுப் போயிட்டாங்க - டீச்சர் ஆதங்கம்