டாஸ்க் பீஸ்ட் முதல் பெஸ்ட் கேப்டன் வரை; பிக் பாஸ் விருதுகளை வென்றவர்கள் யார்; யார்?
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கெடுத்துக் கொண்ட போட்டியாளர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. அது என்னென்ன விருதுகள் என்பதை பார்க்கலாம்.
Bigg Boss Tamil season 8 Awards
பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்நிகழ்ச்சியில் இறுதியாக பல்வேறு பிரிவுகளில் போட்டியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில் யார் யாருக்கு என்னென்ன விருது கிடைத்தது என்பதை பார்க்கலாம்.
Deepak
சிறந்த கேப்டன் - தீபக்
பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரம் ஒரு போட்டியாளர் வீட்டை வழிநடத்துவதற்காக டாஸ்க் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் தான் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக இருந்து அனைவரையும் திறம்பட வழிநடத்த வேண்டும். அந்த வகையில் இந்த சீசனில் சிறந்த கேப்டனாக இருந்ததற்கான விருது தீபக்கிற்கு வழங்கப்பட்டது.
RJ Ananthi
சிறப்பாக யூகம் வகுப்பவர் - ஆனந்தி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல உடல் வலிமை இருந்தால் மட்டும் போதாது. நிகழ்ச்சியை பற்றிய யூகத்தை அமைத்து முன்னேறுவதும் முக்கியம். அப்படி இந்த சீசனில் சிறப்பாக யூகம் வகுத்தவராக ஆர்.ஜே.ஆனந்தி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
Raanav
கவனம் ஈர்ப்பாளர் - ராணவ்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு புகழ் வெளிச்சம் கிடைக்க வேண்டும் என எண்ணி உள்ளே வருவார்கள். அந்த வகையில் இந்த சீசனில் தான் தனித்து தெரிய வேண்டும் என விளையாடிய ராணவ்விற்கு சிறந்த கவனம் ஈர்ப்பாளருக்கான விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்... என்னடா பண்ணி வச்சிருக்கீங்க! பிக் பாஸ் 8 டிராபியை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ் - காரணம் என்ன?
Rayan
டாஸ்க் பீஸ்ட் - ரயான்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் டாஸ்குகள் நடத்தப்படும். அதன்படி இந்த சீசனில் டாஸ்குகளில் திறம்பட விளையாடிய ரயானுக்கு டாஸ்க் பீஸ்ட் என்கிற விருது வழங்கப்பட்டது. இவர் டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றிபெற்று முதல் ஆளாக பைனலுக்குள் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Manjari Narayanan
கேம் சேஞ்சர் - மஞ்சரி
ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு கேம் சேஞ்சர் இருப்பார்கள். அதன்படி இந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றிய மஞ்சரிக்கு கேம் சேஞ்சர் விருது வழங்கப்பட்டது.
Jacquline
சூப்பர் ஸ்ட்ராங் - ஜாக்குலின்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை செல்ல உடல் வலிமை இருந்தால் மட்டும் போதாது மனதளவிலும் வலிமையாக இருக்க வேண்டும். அப்படி இந்த சீசனில் பல்வேறு சோதனைகளை சவால்களை எதிர்கொண்டாலும் தன்னுடைய வலிமையால் 100 நாட்களுக்கு மேல் இருந்த ஜாக்குலினுக்கு சூப்பர் ஸ்ட்ராங் போட்டியாளர் என்கிற விருது வழங்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... வின்னர் முத்துக்குமரன்; ஆனா ரன்னர் யாரு? கடைசி நேரத்தில் பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்!