- Home
- Cinema
- உதயநிதி விலகும் சமயத்தில் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த பாஜக அண்ணாமலை... முதல் படத்திலேயே இப்படி ஒரு ரோலா?
உதயநிதி விலகும் சமயத்தில் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த பாஜக அண்ணாமலை... முதல் படத்திலேயே இப்படி ஒரு ரோலா?
BJP Annamalai : உதயநிதி ஸ்டாலின் சினிமாவை விட்டு விலகும் சமயத்தில் அண்ணாமலை நடிகராக எண்ட்ரி கொடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருப்பவர் அண்ணாமலை. கரூர் மாவட்டத்தில் உள்ள சொக்கம்பட்டியில் பிறந்து வளர்ந்த இவர், கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். அரசியல் ஆசை காரணமாக அந்த பதவியை ராஜினாமா செய்த அவர், பாஜக-வில் இணைந்தார். தற்போது தமிழக பாஜக தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அண்ணாமலை, தற்போது சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி உள்ளார். அதன்படி அவர் அரபி என்கிற கன்னட படத்தில் நடித்துள்ளார். இரு கைகளும் இல்லாமல் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு சாதனைகளை படைத்த விஸ்வாஸ் என்கிற நீச்சல் வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது.
இந்த படத்தில் விஸ்வாஸின் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்திருக்கிறாராம். முதலில் இப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டாத அண்ணாமலை, இயக்குனரிடம் கதை கேட்டதும், மிகவும் பிடித்துப்போனதால் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ந்து ரிலீசுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் நடித்ததற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் சினிமாவை விட்டு விலகும் சமயத்தில் அண்ணாமலை நடிகராக எண்ட்ரி கொடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... ஹன்சிகா முதல் யாஷிகா வரை 10 டாப் ஹீரோயின்களை களமிறக்கிய அண்ணாச்சி... களைகட்டப்போகும் ‘லெஜண்ட்’ ஆடியோ லாஞ்ச்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.