அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம்.! சிறப்பு காட்சி எப்போ.? நேரம் குறித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்திற்கு பிப்ரவரி 6 ஆம் தேதி சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கூட்ட நெரிசல், போக்குவரத்து பாதிப்பு போன்றவற்றை தவிர்க்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம்.! சிறப்பு காட்சி எப்போ.?
நடிகர் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் ரசிகர்கள் ஆவலோடு காத்துள்ளனர். இந்த நிலையில் விடா முயற்சி திரைப்படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் லைகா புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட், 06.02.2025 அன்று வெளியாகும். விடாமுயற்சி" என்ற திரைப்படத்தை 06.02.2025 மற்றும் 07.02.2025 ஆகிய நாட்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சியினை காலை 9 மணிக்கு திரையிட அனுமதி அளிக்கும்படி அரசைக் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு காட்சி- பாதுகாப்பு ஏற்பாடு
இதனையடுத்து கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர், திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் நடத்தும் இந்நேர்வில், நேரத்தை அதிகப்படுத்துவதால், சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாமலும், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சிறப்பு காட்சிக்கு அனுமதி
மேலும் மக்கள் மற்றும் பார்வையாளர்கள் திரளாக உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும், திரையங்கத்தினை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்கவும், போதுமான இடம் மற்றும் கால இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன், லைகா புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் கோரிய "விடாமுயற்சி- திரைப்படத்திற்கு 06.02.2025 மற்றும் 07.02.2025 ஆகிய இரண்டு நாட்களுக்கு காலை 9 மணிக்கு ஒரு சிறப்புக் காட்சி திரையிட அனுமதி வழங்குவது குறித்து, தமிழ்நாடு திரையரங்குகள் உரிய விதிமுறைகளுக்குட்பட்டு, அரசளவில் முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி
கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையரின் குறிப்புரையின் அடிப்படையில். லைகா புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட்டின் கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலித்து, “விடாமுயற்சி என்ற திரைப்படத்திற்கு 06.02.2025 அன்று வெளியாகும் நாள் மட்டும் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சியினை காலை 9.00 மணி முதல் இரவு 2.00 மணி வரை (ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் மட்டும்) திரையரங்குகளில் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.