- Home
- Cinema
- அன்று ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப்பட்டவர்; இன்று இத்தனை கோடிக்கு அதிபதியா? யோகிபாபு சொத்து மதிப்பு இதோ
அன்று ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப்பட்டவர்; இன்று இத்தனை கோடிக்கு அதிபதியா? யோகிபாபு சொத்து மதிப்பு இதோ
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Yogibabu Networth
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியானாக வலம் வருபவர் யோகி பாபு. ஹீரோயின் இல்லாத படங்களை கூட பார்க்கலாம். ஆனால் யோகி பாபு இல்லாத படமே இல்லை என சொல்லும் அளவுக்கு பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் காமெடி கதாபாத்திரங்கள் மட்டும் இன்றி ஹீரோவாகவும் ஒரு சில படங்கள் நடித்து வருகிறார். இவர் முதல் முதலில் ஹீரோவாக நடித்த மண்டேலா திரைப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. தற்போது இவர் நடிப்பில் தலைவன் தலைவி என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. படம் வருகிற ஜூலை 25ஆம் தேதி திரையரங்கங்களில் ரிலீசாக உள்ளது. பாண்டிராஜ் இயக்கி உள்ள இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார்.
யோகிபாபு சம்பளம்
இது தவிர விஜயின் ஜனநாயகன், ரஜினியின் ஜெயிலர் 2 போன்ற திரைப்படங்கள் இவர் கைவசம் உள்ளன. இதில் ஜனநாயகன் படத்தை எச். வினோத் இயக்குகிறார். இதேபோல் ஜெயிலர் 2 திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் காமெடி நடிகரும் யோகிபாபு தான். நகைச்சுவை நடிகராக நடிக்கும் படங்களுக்கு இவர் ஒரு நாளைக்கு ரூ.12 முதல் ரூ.15 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். அதே வேளையில் ஹீரோவாக நடித்தால் ஒரு படத்துக்கு 5 கோடி சம்பளமாக வாங்குகிறாராம். இவர் கைவசம் டஜன் கணக்கில் படங்கள் உள்ளன. கடவுள் பக்தி அதிகம் உள்ளதால் தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் யோகிபாபு. குறிப்பாக இவர் முருகனின் தீவிர பக்தர்.
யோகிபாபுவின் திரைப்பயணம்
யோகிபாபுவுக்கு சினிமா வாய்ப்பு என்பது எளிதில் கிடைத்துவிடவில்லை. இவர் சினிமாவுக்கு வரும் முன் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டிருக்கிறார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்து வந்த இவர் படிப்படியாக சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களில் தலைகாட்டி வந்தார். சினிமாவில் நுழைந்தபோது உருவகேலியையும் எதிர்கொண்டிருக்கிறார் யோகிபாபு. ஒருகாலத்தில் இதெல்லாம் ஒரு மூஞ்சா என தன்னைப் பார்த்து கேலி செய்தவர்களை இன்று தன்னுடைய நகைச்சுவையால் வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறார் யோகிபாபு. இதுவே அவரின் வளர்ச்சிக்கு மிகச்சிறந்த உதாரணம். அமீரின் யோகி படம் தான் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதனால் அப்படத்தின் தலைப்பே அவருக்கு அடையாளமாக மாறி யோகிபாபு என அழைக்கப்பட்டு வருகிறார்.
யோகிபாபு சொத்து மதிப்பு
நடிகர் யோகிபாபு இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் யோகிபாபுவின் சொத்து மதிப்பு ரூ.75 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இவருக்கு சொந்தமாக சென்னையில் பிரம்மாண்ட வீடு உள்ளது. இதுதவிர தனது சொந்த ஊரான ஆரணியில் பல கோடி மதிப்பில் ஃபார்ம் ஹவுஸ் ஒன்றையும் கட்டிவைத்துள்ளாராம் யோகிபாபு. ஷூட்டிங் இல்லாத நாட்களில் அங்கு சென்று ஓய்வெடுப்பாராம். இவரிடம் பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற சொகுசு கார்களும் உள்ளன. இவர் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அதில் சத்தமே இல்லாமல் ஏழை எளிய மக்களுக்கும் தொடர்ந்து உதவி வருகிறாராம்.