எத்தனை கோடி கொடுத்தாலும் பாலிவுட்டில் நடிக்க மறுக்கும் கோலிவுட் நட்சத்திரங்கள்!
தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த நடிகர், நடிகைகள் பலர் பாலிவுட்டில் இருந்து ஏராளமான வாய்ப்புகள் வந்தும் அதை ஏற்க மறுத்துள்ளனர். அவர்கள் யார்... யார் என்பதை பார்க்கலாம்.

அனுஷ்கா ஷெட்டி (Anushka Shetty)
முதலாவதாக நடிகை அனுஷ்கா ஷெட்டி பாகுபலி மற்றும் அருந்ததி போன்ற அற்புதமான படங்களில் தனது அசாத்திய நடிப்பால் பிரபலமான நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு பின்னர் பாலிவுட்டில் இருந்து பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவற்றையெல்லாம் மறுத்துவிட்டு தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலேயே தனது திரைப்பயணத்தைத் தொடர்ந்தார். அனைவரும் விரும்பும் பாலிவுட் சினிமாவின் மீது அவருக்கு அதிக ஆர்வம் இல்லை, தென்னிந்திய சினிமாக்களின் சிறந்த சூழலே தனக்குப் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
நடிகர் கார்த்தி (Karthi)
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரும் பாலிவுட்டில் கிடைத்த முக்கிய கதாபாத்திரங்களை நிராகரித்தவர். தனக்கும் பாலிவுட் சினிமாக்களில் வாய்ப்புகள் வந்தன. ஆனால் தமிழ் சினிமாவிலேயே இருக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார். தமிழில் பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளைத் தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பது அவரது கருத்து. தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் வா வாத்தியாரே, சர்தார் 2, கைதி 2 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
சூர்யா (Suriya)
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் சூர்யாவுக்கும் பாலிவுட்டில் இருந்து பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் தென்னிந்தியாவிலும், குறிப்பாக தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்து வருகிறார். தனக்குப் பிடித்தமான படங்களில் மட்டுமே நடிக்க விரும்புவதாக அவர் கூறுகிறார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சூர்யா.
சியான் விக்ரம் (chiyaan vikram)
தமிழ் திரையுலகின் மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் பாலிவுட்டில் இருந்து விலகியே இருக்கிறார் விக்ரம் . தமிழ் திரைப்படங்களில் தனது திரைப்பயணம் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், திரையுலகில் தனக்கு இருக்கும் படைப்பு சுதந்திரத்தை அனுபவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பாலிவுட் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக தனக்குப் பிடித்தமான அர்த்தமுள்ள கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாக அவர் கூறுகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வீர தீர சூரன் திரைப்படம் வெற்றியடைந்ததை அடுத்து மடோன் அஸ்வின் இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார் விக்ரம்.