மும்பையில் புதுவீடு வாங்கிய டாப்ஸி; ஆத்தாடி அதன் மதிப்பு இத்தனை கோடியா?
தமிழில் ஆடுகளம், காஞ்சனா 2, ஆரம்பம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை டாப்ஸி மும்பையில் தற்போது அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி உள்ளார்.

Taapsee Pannu New Home
பாலிவுட் நடிகை டாப்ஸி மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரும் அவரது சகோதரி சகுன் பன்னுவும் இணைந்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகும். டாப்ஸியின் இந்தச் சொத்து, 'ரெடி டு மூவ் இன்' குடியிருப்புத் திட்டமான இம்பீரியல் ஹைட்ஸில் உள்ளது. சொத்து ஆவணங்களின்படி, டாப்ஸி வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பின் கார்பெட் பரப்பளவு 1390 சதுர அடியாகும், அதே நேரத்தில் பில்ட்-அப் பரப்பளவு 1669 சதுர அடியாகக் கூறப்படுகிறது. மேலும் இரண்டு கார்களுக்கான பார்க்கிங் இடமும் கிடைத்துள்ளது.
டாப்ஸி வாங்கிய சொத்தின் விலை என்ன?
அறிக்கைகளின்படி, டாப்ஸி பன்னு மற்றும் அவரது சகோதரி சகுன் பன்னு ரூ.4.33 கோடி செலுத்தி புதிய அடுக்குமாடி குடியிருப்பபை வாங்கி உள்ளனர். இந்தச் சொத்தின் பதிவு மே 15ந் தேதி நடைபெற்றது. நடிகையும் அவரது சகோதரியும் இந்த சொத்து பதிவுக்காக ரூ.21.65 லட்சம் பத்திர செலவு மட்டும் செய்துள்ளனர். மேலும், ரூ.30,000 பதிவுக் கட்டணமாகவும் அவர்கள் செலுத்தியுள்ளனர். பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார் டாப்ஸி.
இம்பீரியல் ஹைட்ஸ் எங்கே உள்ளது?
இம்பீரியல் ஹைட்ஸ், கோரேகான் மேற்கில் அமைந்துள்ளது. இது அந்தேரி மற்றும் மாலாடு இடையே அமைந்துள்ளது. மேற்கத்திய நெடுஞ்சாலை இணைப்பு சாலை, எஸ்.வி. சாலை மற்றும் மும்பையின் புறநகர் ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி தொழிலதிபர்கள் முதல் நடிகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான இடமாக உள்ளது. ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரை இம்பீரியல் புளூவில் 47 சொத்துக்கள் விற்கப்பட்டு, மொத்தம் ரூ.168 கோடி பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது, இந்தத் திட்டத்தில் ஒரு சதுர அடிக்கு ரூ.32,170 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டாப்ஸியின் வரவிருக்கும் படங்கள்
நடிகை டாப்ஸி பன்னு கடைசியாக 'கேல் கேல் மெய்ன்' படத்தில் நடித்திருந்தார். அவரது வரவிருக்கும் படங்களான 'வோ லட்கி ஹை கஹான்?' மற்றும் 'காந்தாரி' ஆகியவை தயாரிப்பு பணியில் உள்ளன. இவர் தமிழில் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்த டாப்ஸி, தற்போது பாலிவுட்டில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.