'நீ உன் நண்பனுடன் சொர்க்கத்தில் இணைந்து விட்டாய்'.. சுஷாத் சிங் வளர்ப்பு நாய் இறப்பு! தங்கை உருக்கம்!
நடிகர் சுஷாந்த் சிங்கின், வளர்ப்பு நாய் இறப்பு குறித்து... அவரது தங்கை மிகவும் உருக்கமாக போட்டுள்ள பதிவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பை பாந்த்ராவில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், ஒட்டு மொத்த திரையுலக ரசிகர்களையும், அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இவர் இறந்து தற்போது இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில், இன்னும் அவருடைய மரணம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. குறிப்பாக சுஷாந்த் சிங்கின் உடற்கூறாய்வு செய்த, ரூப்குமார் என்பவர், சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கடந்த மாதம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
வாரிசு படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட குஷ்புவின் காட்சிகள்! காரணம் இதுவா?
இது குறித்து அவர் கூறியிருந்ததாவது, சுஷாந்த் சிங்கின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது... அவரது உடலில் பல காயங்கள் மற்றும் கழுத்தில் இரண்டு முதல் மூன்று இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்த போது, அவர்கள் போட்டோ மட்டுமே எடுக்கச் சொன்னதாகவும் பின்னர் போலீசில் அவருடைய உடலை ஒப்படைத்ததாக கூறப்பட்டது கூறினார். எனவே மீண்டும் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்த விவகாரம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ள நிலையில், இது குறித்த விசாரணை பரபரப்பாக நடந்து வருகிறது.
AK 62: ஐஸ்வர்யா ராய்யுடன் நடிக்கும் அஜித்? இந்த படத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்..!
இந்நிலையில், சுஷாந்த் சிங்கின்... வளர்ப்பு நாய் உயிரிழந்துவிட்டதை சுஷாந்தின் தங்கை மிகவும் உருக்கமாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் சுஷாந்த்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தெரிவித்துள்ளார்.
"நீண்ட தூரம் நீ போய்விட்டாய்... நீ உன்னுடைய நண்பனுடன் சொர்க்கத்தில் இணைந்துவிட்டாய். நானும் அடுத்து வருகிறேன். அதுவரை மிகுந்த கவலையுடன்..." என குறிப்பிட்டு அவர்களது வளர்ப்பு நாய் மறைவு செய்தியை தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.