வாரிசு படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட குஷ்புவின் காட்சிகள்! காரணம் இதுவா?
நடிகை குஷ்புவின் கதாபாத்திரம் ஏன் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி உள்ள 'வாரிசு' திரைப்படம் ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் உலக அளவில் 150 கோடி வசூல் செய்துள்ள நிலையில், மேலும் அதிக வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் பொங்கல் தினத்தை குறிவைத்து வெளியான 'துணிவு' திரைப்படமும், அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஜனவரி 11ஆம் தேதி தமிழில் வெளியான வாரிசு திரைப்படம், ஜனவரி 14ஆம் தேதி தெலுங்கிலும் வெளியானது. தமிழ் ரசிகர்களை போல, தெலுங்கு ரசிகர்களும் இப்படத்தை தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர். மேலும் முதல் நாளே இந்த படத்தின் வெற்றியை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பட்டாசு மற்றும் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ படு வைரலானது.
இந்நிலையில் இப்படத்தில், நடிகை குஷ்புவின் கதாபாத்திரம் ஏன் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை குஷ்பூ 'வாரிசு' படத்தில் மிகவும் முக்கியமான கெஸ்ட் ரோலில் நடித்திருந்ததாக கூறப்பட்டது. மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் மற்றும் ராஷ்மிகாவுடன் குஷ்பூ 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியானது. அது மட்டும் இன்றி 'வாரிசு' படத்தின் ஆடியோ லாஞ்சில் இதனை குஷ்புவும் உறுதி செய்தார்.
'வாரிசு, படத்தின் நீளம் மிகவும் அதிகமாக இருந்ததன் காரணமாகவே குஷ்பூ நடித்த காட்சியை நீக்கியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. குஷ்பூவின் காட்சி படத்தில் இடம்பெறவில்லை என்பதால், அவரை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தது குறிப்பிடத்தக்கது.
'வாரிசு' பட தயாரிப்பாளர் மீது கோபத்தில் உள்ளாரா விஜய்? சொன்னபடி நடந்து கொள்ளாதது தான் காரணமா..!
துணிவு படத்திற்கு வசூலில் செம்ம டஃப் கொடுத்து வரும் வாரிசு படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.