சூப்பர் ஸ்டார் குறித்த கேள்வி..? எனக்கும் அறிவு இருக்கு... சிக்கிய சரத்குமாரை வச்சு செய்த செய்தியாளர்கள்!
வாரிசு படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சரத்குமாரிடம், சூப்பர் ஸ்டார் என தளபதி விஜய்யை அவர் கூறியது குறித்து, கேள்வி எழுப்பிய போது... அவர் மிகவும் ஆக்ரோஷமாக செய்தியாளர்கள் முன் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 11 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'வாரிசு'. இப்படம் திரைக்கு வந்து ஆறு நாட்களில், ஆகும் நிலையில்... இதுவரை உலக அளவில் 150 கோடி வசூலை குவித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் மிக பிரம்மாண்ட வெற்றிக்கு நன்றி கூறும் விதமாக நேற்று 'வாரிசு' பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதில் நடிகர் விஜய் - ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் கலந்து கொள்ளவில்லை என்றாலும், ஷாம், சரத்குமார், இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு போன்ற பலர் கலந்து கொண்டனர்.
AK 62: ஐஸ்வர்யா ராய்யுடன் நடிக்கும் அஜித்? இந்த படத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்..!
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த நடிகர் சரத்குமாரிடம், செய்தியாளர்கள் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் என தளபதி விஜய்யை கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதாவது, டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி நடந்த 'வாரிசு' படத்தில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், விஜய் தான் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று 'சூர்யவம்சம்' படத்தின் 175 ஆவது நாள் விழாவில் நான் சொன்னேன். தற்போது அது நடந்து விட்டதாகவும், விஜய் தான் இப்போதைய சூப்பர் ஸ்டார் என்றும் கூறினார். மேலும் தான் இதை கூறிய போது கலைஞர் கூட ஆச்சரியப்பட்டார் என்கிற தகவலையும் பகிர்ந்தார் .
சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு இருக்கும்போது, தளபதி என விஜய்யை குறிப்பிடாமல் ஏன் சூப்பர் ஸ்டார் என கூற வேண்டும்? அப்போ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிடையாதா ? என பல்வேறு கேள்விகளை சரத்குமார் முன்னர் பத்திரிக்கையாளர்கள் எழுப்பினர்.
அப்போது சரத்குமார் திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ள அனைவருமே சூப்பர் ஸ்டார் தான் இதற்காக ஒரு பிரச்சனையை எழுப்ப வேண்டாம் என கூறியதோடு... தனக்கும் அறிவு இருக்கிறது, நானும் படித்திருக்கிறேன் இது போன்ற கேள்விகளை எழுப்பி பாகுபாடு பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியதுடன் ஆக்ரோஷமாக பேசிவிட்டு, அந்த இடத்தில் இருந்து காரின் மூலம் புறப்பட்டு சென்றார்.