Vaadivaasal : மீண்டும் துவங்கிய வாடிவாசல்...இதிலும் டிவிஸ்ட் வைத்த சூர்யா
Vaadivaasal : நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றி மாறனின் வாடிவாசல் நேற்று பிரமாண்ட ஏற்பாட்டில் துவங்கியது.

Suriya
சூர்யாவின் 40 வது திரைப்படம்:
காப்பான் படம் திரையரங்கில் வெளியாகி மாஸ் கொடுத்தது இதையடுத்து வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் ஓடிடியில் தான் வெளியாகின. இருந்தும் மக்களை வரவேற்பையும் பல அவார்டுகளையும் தட்டி சென்றது. இதையடுத்து எதற்கும் துணிந்தாவின் சூர்யா தோன்றினார்.
suriya
பெண்களுக்கு குரல் கொடுக்கும் சூர்யா :
முந்தைய படமான ஜெய்பீமில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான நீதியை பெற்றுத்தரும் வக்கீலாக சூர்யா தோன்றியதை அடுத்து தற்போது பெண்கள் சார்ந்த குற்றங்களை கண்டறிந்து நிதி கொடுக்கும்ப வக்கீலாக நடித்துள்ளார். பொள்ளாட்சி சம்பவ சாயலில் இந்த கதையம்சம் அமைந்துள்ளது.
suriya
நட்சத்திர பட்டாளம் :
சூர்யாவின் 40வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இந்த படத்துக்கு, இமான் இசையமைத்துள்ளார், ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பல வருடங்களுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகியுள்ள சூர்யா படம் போதிய வரவேற்பை என்றே தோன்றுகிறது.
மேலும் செய்திகளுக்கு..காளைகளுடன் மல்லுக்கட்ட தயாரான சூர்யா.... பூஜையுடன் தொடங்கியது வெற்றிமாறனின் வாடிவாசல் - வைரலாகும் போட்டோஸ்
vadivasal
காத்திருப்பில் வாடிவாசல் :
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு முன்னரே வாடிவாசலில் ஒப்பந்தமாகிட்டார் சூர்யா. இந்த படத்திற்கான முதல் போஸ்டரும் வெளியாகியது. சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை படமாக்க எண்ணிய வெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் கைகோர்த்தார். ஆனால் இந்த படம் துவங்கப்படாமல் நீண்ட நாள் காத்திருப்பில் இருந்தது.
suriya -bala
பாலவுக்கும் கைகொடுக்கும் சூர்யா :
எதற்கும் துணிந்தவுனுக்கு அடுத்து யாரும் எதிர்பாராத விதமாக பிரபல இயக்குனர் பாலாவுடன் கூட்டணி அமைத்தார் சூர்யா. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பாலாவுக்கு உதவும் விதமாக சூர்யா கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான முன்னெடுப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரம், கன்னியாகுமரியை சுற்றி இந்த படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
vaadivaasal
மீண்டும் துவங்கிய வாடிவாசல் :
வாடிவாசலி சூர்யா கைவிட்டதாக செய்திகள் பரவிய நிலையில் திடீரென அமைக்கப்பட்ட செட்டில் பூஜையுடன் மீண்டும் வாடிவாசல் துவங்கியுள்ளது. விடுதலையில் பிசியாக இருந்த வெற்றிமாறன் வாடிவாசலை நேற்று துவங்கினார். பிரமாண்ட ஜல்லிக்கட்டு செட்டில் நேற்று டெஸ்ட் சூட் நடைபெற்றது.
மேலும் செய்திகளுக்கு.. sudha kongara : சூர்யா - பாலா படத்தில் இணையும் சுதா கொங்கரா! இதென்னப்பா புது டுவிஸ்டா இருக்கு
vaadivasal
பிரபலங்களின் கூட்டணி :
வாடிவாசல் பூஜையில் தயாரிப்பாளர் தாணு, நடிகர் சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்திற்காக இதற்காக நடிகர் சூர்யா பிரத்யேகமாக பயிற்சி எடுத்து நடிக்க தயாராகி உள்ளார்.
vaadivasal
புதிய டிவிஸ்ட் :
பிரமாண்டமாக துவங்கி உள்ள இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் வைரலான நிலையில் புதிய தகவல் கசிந்துள்ளது. அதாவது வாடிவாசலுக்கான டெஸ்ட் சூட் மட்டுமே தற்போது நடைபெறவுள்ளதாகவும் . சுமார் 4 நாட்களுக்கு மட்டுமே இந்த படப்பிடிப்பு நடைபெறும் . பின்னர் பாலா படத்திற்கு சூர்யா சென்றுவிடுவாரம். அந்த படம் முடிந்த பிறகே வாடிவாசல் படப்பிடிப்பாம்.