- Home
- Cinema
- காளைகளுடன் மல்லுக்கட்ட தயாரான சூர்யா.... பூஜையுடன் தொடங்கியது வெற்றிமாறனின் வாடிவாசல் - வைரலாகும் போட்டோஸ்
காளைகளுடன் மல்லுக்கட்ட தயாரான சூர்யா.... பூஜையுடன் தொடங்கியது வெற்றிமாறனின் வாடிவாசல் - வைரலாகும் போட்டோஸ்
vaadivaasal : வாடிவாசல் பட பூஜையில் நடிகர் சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணு ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

வெற்றிவாகை சூடும் வெற்றிமாறன்
தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் இதுவரை இயக்கிய அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தவை. அதுமட்டுமின்றி அவர் இயக்கிய சில படங்கள் தேசிய விருதுகளையும் வென்று குவித்துள்ளன. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான அசுரன் படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. தனுஷ் நடித்திருந்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.
சூர்யாவுடன் வாடிவாசல்
இதையடுத்து விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை இயக்கி உள்ள வெற்றிமாறன். அடுத்ததாக வாடிவாசல் திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதன்முறையாக நடிக்க உள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
பிரம்மாண்ட கூட்டணி
எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்கிற நாவலைத் தழுவி இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகளும் இடம்பெற உள்ளதால், இதற்காக நடிகர் சூர்யா பிரத்யேகமாக பயிற்சி எடுத்து நடிக்க தயாராகி உள்ளார். வெற்றிமாறனின் பேவரைட் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தான் இப்படத்திற்கும் இசையமைக்க உள்ளார். கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.
ஷூட்டிங் ஆரம்பம்
இந்நிலையில், சென்னை ECR-ல் வாடிவாசல் படத்துக்காக செட் ஒன்று அமைக்கப்பட்டு அங்கு தற்போது இப்படத்துக்கான டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக நடைபெற்ற பூஜையில் நடிகர் சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணு ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.