பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் விடப்படும் கங்குவா! ஒர்த்தா; ஒர்த் இல்லையா? முதல் விமர்சனம் இதோ
Kanguva Movie First Review : சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படமான கங்குவா படத்தின் முதல் விமர்சனத்தை மதன் கார்க்கி வெளியிட்டுள்ளார்.
Kanguva movie
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கங்குவா. அஜித்தை வைத்து வீரம், விஸ்வாசம், வேதாளம், விவேகம் போன்ற படங்களை இயக்கிய சிறுத்தை சிவா தான் கங்குவா படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நட்டி நட்ராஜ், பாலிவுட் நடிகர் பாபி தியோல், நடிகை திஷா பதானி, நடிகர் கருணாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார்.
Kanguva Suriya
கங்குவா, சரித்திர கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தை சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளார் கே.இ.ஞானவேல் ராஜா. கங்குவா திரைப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்பட 10 மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். கங்குவா திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... ஒரு வாழ்கை, ஒரு பயணம்; பீச்சில் என்ஜாய் பண்ணும் சூர்யா - கலக்கும் கங்குவாவின் இரண்டாம் சிங்கிள்!
Kanguva Release
கங்குவா திரைப்படத்திற்கான புரமோஷன் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தற்போது வட மாநிலங்களில் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் புரமோஷன் பணிகளை மேற்கொண்டு உள்ளனர். வருகிற அக்டோபர் 26-ந் தேதி கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதிலும் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Madhan Karky
கங்குவா திரைப்படத்திற்கு பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அப்படத்தை முழுவதுமாக பார்த்த பாடலாசிரியர் மதன் கார்க்கி தன்னுடைய முதல் விமர்சனத்தை கூறி இருக்கிறார். அதன்படி, டப்பிங் செய்தபோது பார்த்ததைவிட ஒவ்வொரு காட்சியும் திரையில் பார்க்கும்போது நூறு மடங்கு இருக்கிறது. ஒவ்வொரு முறை பார்க்கும் போது அதன் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
Kanguva First Review
படத்தின் பிரம்மாண்டமான காட்சியமைப்பு, ஒவ்வொரு காட்சியிலும் உள்ள கலை நுணுக்கம், கதையின் ஆழம், பிரம்மிக்க வைக்கும் இசை ஆகியவற்றுடன் இணைந்து சூர்யாவின் பவர்ஹவுஸ் நடிப்பு இப்படத்தை மாஸ்டர் பீஸாக காட்டுகிறது. இப்படி ஒரு அனுபவத்தை கொடுத்த இயக்குனர் சிவாவுக்கும், இந்த கனவு படத்தை நனவாக்கிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக மதன் கார்க்கி கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... கங்குவா படம் 2.30 மணிநேரம்; அதில் 2.20 மணிநேரம் Goosebumps தான் - அடித்துச்சொல்லும் ஞானவேல்!