- Home
- Cinema
- சூர்யா ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட சிவகார்த்திகேயன்; பொங்கல் ரேஸில் இருந்து எஸ்கேப் ஆகும் கருப்பு..!
சூர்யா ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட சிவகார்த்திகேயன்; பொங்கல் ரேஸில் இருந்து எஸ்கேப் ஆகும் கருப்பு..!
Karuppu Movie : சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு துளிகூட வாய்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

Karuppu Movie Release in Trouble
2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் படங்கள் குறித்த அறிவிப்பு தற்போதே வரத் தொடங்கி உள்ளன. இதனால் பொங்கல் ரேஸ் சூடுபிடித்து வருகிறது. முதல் ஆளாக பொங்கல் ரேஸில் குதித்த படமென்றால் அது தளபதி விஜய் நடித்த ஜன நாயகன் தான். அப்படம் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. விஜய்யின் கடைசி படம் என்பதால் அதன் உடன் எந்த படமும் ரிலீஸ் ஆகாது என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒவ்வொரு படமாக பொங்கல் ரேஸில் குதிக்க ஆரம்பித்து உள்ளன.
பொங்கல் ரேஸில் பராசக்தி
அந்த வகையில் விஜய்க்கு போட்டியாக நடிகர் சிவகார்த்திகேயன் பொங்கல் ரேஸில் களமிறங்கி உள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இது சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். ஜனநாயகன் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் கழித்து தான் பராசக்தி படம் ரிலீஸ் ஆக உள்ளது.
சிக்கலில் சூர்யா
முன்னதாக சூர்யாவின் கருப்பு படம் தான் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இப்படம் தான் விஜய்யின் ஜன நாயகன் உடன் மோதும் என தகவல் பரவி வந்தது. அதேபோல் பராசக்தி தமிழ் புத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட இருப்பதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால் பொங்கல் ரிலீஸ் தான் தனக்கு வேண்டும் என ஒற்றைக்காலில் நின்ற சிவகார்த்திகேயன் தடாலடியாக அறிவித்துள்ளதால், தற்போது கருப்பு படத்தின் ரிலீசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜன நாயகன், பராசக்தி என இரண்டு பிரம்மாண்ட படங்களுடன் மோதினால் கருப்பு காலியாகிவிடும் என்பதால் அதன் ரிலீஸை தள்ளிவைக்க முடிவெடுத்துள்ளார்களாம்.
கருப்பு ரிலீஸ் எப்போது?
அதன்படி கருப்பு திரைப்படத்தை 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளார்களாம். ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு வெளியீடாக கருப்பு ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது. இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கருப்பு படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. பின்னர் பொங்கலுக்கு தள்ளிவைக்கப்பட்டு தற்போது தமிழ் புத்தாண்டுக்கு சென்றிருக்கிறது.