- Home
- Cinema
- கருப்பு படம் மீது செம கடுப்பில் இருக்கிறாரா திரிஷா? தளபதிக்கு செஞ்சத கூட சூர்யாவுக்கு செய்யலையே!
கருப்பு படம் மீது செம கடுப்பில் இருக்கிறாரா திரிஷா? தளபதிக்கு செஞ்சத கூட சூர்யாவுக்கு செய்யலையே!
கருப்பு படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நடிகை திரிஷாவின் செயலால் அவர் அப்படக்குழு மீது அப்செட்டில் இருக்கிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Trisha Upset over Karuppu Movie
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை ஐடெண்டிட்டி, விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் என நான்கு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. இதில் குட் பேட் அக்லி தவிர மற்ற மூன்று படங்களும் தோல்வியை தழுவின. இதனால் ஹிட் கொடுத்து கம்பேக் தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் திரிஷா. அவரின் அடுத்த நம்பிக்கை கருப்பு திரைப்படம் தான். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் திரிஷா. இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பு படம் உருவான கதை
கருப்பு திரைப்படத்தின் கதையை முதன்முதலில் நடிகர் விஜய்யிடம் தான் சொல்லி இருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. ஆனால் அவர் நோ சொல்லிவிட்டதால், அந்த கதையை பட்டி டிங்கரிங் பார்த்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ளபடி மாற்றினார். இதைத்தான் மாசானி அம்மன் என்கிற பெயரில் நடிகை திரிஷாவை வைத்து எடுத்த திட்டமிட்டிருந்தாராம் பாலாஜி. பின்னர் சூர்யாவின் கால்ஷீட் கிடைத்ததும் இதனை ஹீரோ செண்ட்ரிக் கதையாக மாற்றினாராம். அது தான் தற்போது கருப்பு என்கிற திரைப்படமாக உருவாகி உள்ளதாம். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
கருப்பு டீசருக்கு செம ரெஸ்பான்ஸ்
நடிகர் சூர்யாவின் 50-வது பிறந்தநாள் கடந்த ஜூலை 23ந் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் கருப்பு திரைப்படத்தின் டீசரை படக்குழு ரிலீஸ் செய்தது. அதில் சூர்யாவை செம மாஸாக ஒவ்வொரு பிரேமிலும் செதுக்கி இருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த டீசருக்கு சாய் அபயங்கர் போட்ட பின்னணி பாடலும் பாராட்டை பெற்றது. கருப்பு பட டீசர் சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட் ஆக அமைந்திருந்தது. அந்த டீசருக்கு பின்னர் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. டீசரைப் போல் படமும் செம மாஸாக இருக்கும் என இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி உறுதியளித்துள்ளதால் இது சூர்யாவுக்கு தரமான கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரிஷா கடும் அப்செட்
கருப்பு டீசர் வெளியான பின்னர் படக்குழு மீது நடிகை திரிஷா அப்செட்டில் இருக்கிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அவர் கருப்பு படம் குறித்த போஸ்டர்களையோ அல்லது டீசரையோ தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்யவில்லை. அப்படத்தில் ஹீரோயினாக நடித்துவிட்டு அவர் இப்படி அமைதியாக இருப்பது பேசு பொருள் ஆகி உள்ளது. டீசரில் அவர் நடித்த காட்சிகள் ஒன்று கூட இடம்பெறாததால் அவர் படக்குழு மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூட திரிஷா தெரிவிக்கவில்லை. கடந்த மாதம் விஜய்யின் பிறந்தநாளுக்கு போட்டோ போட்டு வாழ்த்து சொன்ன திரிஷா, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தும் அவருக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சோசியல் மீடியாவில் தான் வாழ்த்து சொல்ல வேண்டுமா? வாட்ஸ் அப் வாயிலாகவும் சொல்லலாமே... திரிஷா சூர்யாவுக்கு மெசேஜ் மூலம் வாழ்த்து சொல்லி இருப்பார் என்று அவரது ரசிகர்கள் முட்டுகொடுத்து வருகிறார்கள்.