- Home
- Cinema
- சூர்யாவின் கருப்பு படம் எப்படி இருக்கும்: முதல் விமர்சனத்தை பயமே இல்லாமல் புட்டு புட்டு வைத்த நடிகர்!
சூர்யாவின் கருப்பு படம் எப்படி இருக்கும்: முதல் விமர்சனத்தை பயமே இல்லாமல் புட்டு புட்டு வைத்த நடிகர்!
கங்குவா படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கருப்பு படம் எப்படி இருக்கும் என்பது பற்றி நடிகர் நட்டி தனது முதல் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அதைப் பற்றி பார்க்கலாம்.

சூர்யாவின் கருப்பு
கங்குவா படம் மிகப்பெரிய தோல்வியை எதிர்கொண்ட நிலையில் சூர்யாவின் அடுத்த பெரிய நம்பிக்கையாக இருப்பது இயக்குநர் ஆர் ஜே பாலாஜியின் கருப்பு படம் தான். நடிகரும், இயக்குநருமான ஆர் ஜே பாலாஜி தனக்கே உரிய ஸ்டைலில் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க ஆன்மீக கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் சூர்யா உடன் இணைந்து த்ரிஷா, நட்டி, சுவாஷிகா, யோகி பாபு, ஆர் ஜே பாலாஜி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
ஆர் ஜே பாலாஜி கருப்பு படம்
சூர்யா மற்றும் த்ரிஷா ஜோடி 4ஆவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளது. இதற்கு முன்னதாக, மௌனம் பேசியதே, ஆறு, ஆயுத எழுத்து ஆகிய படங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக எஸ் ஆர் பிரபு இந்தப் படத்தை தயாரித்துள்ளார். சூர்யாவின் 45ஆவது படமாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் சூர்யா சரவண்னன் கருப்புவாக ஒரு வழ்ககறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன் ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தன் உள்ளிட்ட படங்களில் வழக்கறிஞராக நடித்திருந்தார்.
கங்குவாவிற்கு பிறகு கருப்பு
இந்த நிலையில் தான் இந்த படம் எப்படி இருக்கும் என்பது பற்றி நடிகர் நட்டி தனது முதல் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இது குறித்து நட்டி கூறியிருப்பதாவது: ஆர் ஜே பாலாஜி இந்த படத்திற்காக ரொம்ப ரொம்பவே எபோர்ட் போட்டு இருப்பதாகவும், இந்த படத்தில் தன்னுடைய பெஸ்ட் கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் இந்த படம் நல்லா வந்திருக்கு. இப்படம் எனக்கு பிடித்த படங்களில் ஒன்றாக இருக்கும் என கூறியுள்ளார். இப்படத்தின் கதையாக பார்த்தால் இந்த படம் நாம் ஒரு பிரச்சனை என்றால் உடனே போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டிக்கு தான் செல்வோம்.
கருப்பு முதல் விமர்சனம்
ஆனால் வெளியில் தான் என்னவென்று பார்ப்போம். ஆனால் இந்த படத்தில் கோர்டில் என்ன மாதிரி கையாளுவார்கள் என்றும், நல்ல ஒரு கடவுள் பக்தி இருக்கும் கதைகளமாகவும், சுவாரசியமாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே இந்த படதின் பரஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இப்போது படம் குறித்து நட்டி கூறியிருப்பது, சூர்யா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கு போட்டியாக DVK என்கிற கட்சி தொடங்குகிறாரா பிக்பாஸ் அபிராமி? வைரலாகும் புகைப்படம்!
கருப்பு படம் பற்றி நடிகர் நட்டி சுப்பிரமணியம்
எனினும், நட்டியின் விமர்சனத்தை தாண்டி படம் வெளியாகும் போது படம் எப்படி இருக்கும் என்பது தெரியவரும். இது ஆர் ஜே பாலாஜி படம் என்பதால், ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.