தேசிய விருதுடன் கியூட் போஸ் கொடுத்த தியா - தேவ்... சூர்யா பேமிலியின் ஹாப்பி கிளிக்ஸ் இதோ
நடிகர் சூர்யாவின் மகள் தியாவும், மகன் தேவ்வும் தேசிய விருதுடன் கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு ரிலீசான திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கிய இப்படத்தில் மாறா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் சூர்யா. இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதுமட்டுமின்றி சூரரைப் போற்று திரைப்படத்திற்கு மேலும் நான்கு தேசிய விருதுகளும் கிடைத்திருந்தன. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த அபர்ணா பாலமுரளிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும், இப்படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷுக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதும், இப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவுக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதும் கிடைத்தது. அதுமட்டுமின்றி சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் சூரரைப் போற்று தட்டிச் சென்றது.
இதையும் படியுங்கள்... ஜெயிச்சுட்ட மாறா... முதன்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கிய சூர்யா! மறக்க முடியாத தருணம்!
68-வது தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, அவர்களின் மகன் தேவ், மகள் தியா ஆகியோர் கலந்துகொண்டனர். சூர்யா விருது வாங்கும் போது ஜோதிகாவும், ஜோதிகா விருது வாங்கும் போது சூர்யாவும் மாறி மாறி புகைப்படம் எடுத்த தருணம் இணையத்தில் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், சூர்யாவின் மகள் தியாவும், மகன் தேவ்வும் தேசிய விருதுடன் கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
அத்துடன் குடும்பத்தினருடன் சூர்யா ஹாப்பியாக போஸ் கொடுத்த போட்டோவும் வெளியாகி லைக்ஸ்களை அள்ளிக்குவித்து வருகிறது. சூர்யா பேமிலியின் ஹாப்பி கிளிக்ஸ் இதோ...
இதையும் படியுங்கள்... தேசிய விருது வாங்க வேஷ்டி சட்டையில் ஜோவுடன் வந்த சூர்யா! கலாச்சார உடையில் கலந்து கொண்ட 'சூரரை போற்று' படக்குழு