ஜெயிச்சுட்ட மாறா... முதன்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கிய சூர்யா! மறக்க முடியாத தருணம்!
நடிகர் சூர்யா தயாரித்து நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா இன்று டெல்லியில் நடைபெற்று வரும், முதல் முறையாக தேசிய விருதை பெற்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சூர்யா ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்திருந்த திரைப்படம், 'சூரரைப் போற்று'. இந்த படம் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்றது. பொதுவாகவே சாதித்த மனிதர்கள் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் படங்களுக்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது போல் இந்த படத்திற்கும் அதே அளவிற்கான விமர்சனங்கள் கிடைத்தது.
தனக்கு வந்த நிலை யாருக்கும் வர கூடாது என்றும், சாமானிய மக்களுக்கும்... விமான பயணம் சத்தியமாக வேண்டும் என நினைத்து, விமான சேவையை துவங்கிய ஏர் டெக்கான் நிறுவனர், ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது.
மேலும் செய்திகள்: தேசிய விருது வாங்க வேஷ்டி சட்டையில் ஜோவுடன் வந்த சூர்யா! கலாச்சார உடையில் கலந்து கொண்ட 'சூரரை போற்று' படக்குழுhttps://tamil.asianetnews.com/gallery/cinema/suriya-jyothika-and-soorarai-pottru-film-crew-attend-national-award-function-in-traditional-dress-code-rj0wkn
ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி வாகை சூடிய இந்த படத்தில், சூர்யாவின் நடிப்பை பார்த்து, சினிமா விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும், கண்டிப்பாக சூர்யாவுக்கு இந்த படத்திற்காக தேசிய விருது கிடைக்கும் என கூறிய நிலையில், அவர்கள் நினைத்தது போலவே 'சூரரைப் போற்று' திரைப்படம் மொத்தம் 5 தேசிய விருதுகளை வென்றது.
68-வது தேசிய விருது விழாவில், சிறந்த படம், சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி, சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதைக்காக இயக்குனர் சுதா கொங்கரா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று மாலை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கையால் சூர்யா தேசிய விருதை பெற்றுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் ஜெயிச்சிட்ட மாறா என கூறி முதல் முறையாக தேசிய விருது வாங்கியுள்ள சூர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' படத்தில் மொத்த ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்து மாஸ் காட்டிய வந்திய தேவன் கார்த்தி..!