தேசிய விருது வாங்க வேஷ்டி சட்டையில் ஜோவுடன் வந்த சூர்யா! கலாச்சார உடையில் கலந்து கொண்ட 'சூரரை போற்று' படக்குழு
நடிகர் சூர்யா தயாரித்து நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் மொத்தம் 5 தேசிய விருதுகளை பெற்றுள்ள நிலையில், இன்று தேசிய விருது பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகிறது. அதற்காக சூர்யா மற்றும் சூரரைப் போற்று படக்குழுவினர் கலாச்சார உடையில் வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ' சூரரைப் போற்று'. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகாமல் ஒருவேளை திரையரங்கில் வெளியாகி இருந்தால், வேற லெவல் ரெஸ்பான்ஸ் ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருக்கும் என கூறப்பட்டது.
மேலும் செய்திகள்: ரசிகர்களுடன் 'பொன்னியின் செல்வன் 1' படம் பார்த்த ஆதித்த கரிகாலன்..! வைரலாகும் விக்ரம் போட்டோஸ்..!
ஆனால் கொரோனா நேரம் என்பதாலும், அப்போது நிலவி வந்த சூழலில் ரசிகர்கள் திரையரங்கம் வந்து படம் பார்ப்பது சரியாக இருக்காது என்பதாலும், சூர்யா இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டதாக கூறப்பட்டது.
இந்த படத்தில், தன்னுடைய அசுர நடிப்பால் ரசிகர்களை மிரள வைத்த சூர்யாவுக்கு கண்டிப்பாக தேசிய விருதுகள் கிடைக்கும் என கூறப்பட்ட நிலையில், கடந்த ஜூலை மாதம் 68-வது தேசிய விருது அறிவிக்கப்படாதபோது, சூரரை போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை பெற்றது.
மேலும் செய்திகள்: 'நானே வருவேன்' சக்ஸஸ்... செல்வராகவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தாணு..!
சிறந்த படம், சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி, சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதைக்காக இயக்குனர் சுதா கொங்கரா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று மாலை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கையால் தேசிய விருதை வாங்க உள்ள நிலையில் தமிழர்களில் கலாச்சார உடையான வேஷ்டி சட்டையில் சூர்யா தன்னுடைய மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். அதே போல் இந்த படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா பட்டு புடவையிலும், ஜி.வி.பிரகாஷ் குமார் பட்டு வேஷ்டி சட்டையிலும் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
மேலும் செய்திகள்: அல்ட்ரா மாடர்ன் உடையில்... ஒல்லி பெல்லி இடையை காட்டி பாலிவுட் நடிகைகளுக்கே செம்ம டஃப் கொடுக்கும் ராஷ்மிகா!