அல்ட்ரா மாடர்ன் உடையில்... ஒல்லி பெல்லி இடையை காட்டி பாலிவுட் நடிகைகளுக்கே செம்ம டஃப் கொடுக்கும் ராஷ்மிகா!
விதவிதமாக உடைகள் அணிந்து புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை ஈர்க்கும், ராஷ்மிகா மந்தனா நீல நிற உடையில்... மெல்லிய இடையை காட்டி தற்போது வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.
வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனா காட்டில் தற்போது பட மழை வெளுத்து வாங்குகிறது. இவரது நடிக்க வைக்க, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழியை சேர்ந்த இயக்குனர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் கதை பிடித்திருந்தால் மட்டுமே எந்த மொழி படமாக இருந்தாலும் அதில் நடிக்க சம்மதிக்கிறாராம் ராஷ்மிகா.
குறிப்பாக பாலிவுட் திரையுலகின் பக்கம் ரஷ்மிகா அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. தற்போது இரண்டு பாலிவுட் படங்களில் இவர் நடித்துள்ள நிலையில், அமிதாப்பச்சனுடன் இவர் நடித்துள்ள, 'குட் பை ' திரைப்படம் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது.
மேலும் செய்திகள்: மணிரத்னத்துக்கு 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் மிகப்பெரிய சவால்..! ஏன் தெரியுமா?
கடந்த சில தினங்களாக இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் கலந்து கொண்டு, விதவிதமான கவர்ச்சி உடையில் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து வந்த இவர், தற்போது நீல நிற அல்ட்ரா மாடர்ன் உடையில் வந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிரது.
ஓபன் ஹேர் லுக்கில்... மூக்கில் ஒரு மூக்குத்தி போட்டு கொண்டு, துப்பட்டாவை பறக்கவிட்டபடி இவர் கொடுத்துள்ள வெரைட்டி போசுகள் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் உள்ளது.
மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' படத்தில் மொத்த ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்து மாஸ் காட்டிய வந்திய தேவன் கார்த்தி..!
நீல நிற உடையில் அழகு தேவதையாக ஜொலிக்கும், ராஷ்மிகாவின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.