மணிரத்னத்துக்கு 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் மிகப்பெரிய சவால்..! ஏன் தெரியுமா?
மணிரத்னம் இயக்கத்தில் அவருடைய கனவு படமான 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் இன்று வெளியாகியுள்ள நிலையில், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' கதையை... எவ்வளவு நேர்த்தியாக ரசிகர்கள் கண்களுக்கு காட்சிப்படுத்த முடியுமோ, அதனை மிக சிறப்பாக செய்துள்ளார் மணிரத்னம். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமுமே... கதைக்கு பொருந்தி, அளவான நடிப்பால் அரச வைத்துள்ளனர்.
குறிப்பாக படம் பார்க்கும் போது... விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் ஆகியோரின் நடித்துள்ள கதாபாத்திரங்களில் இவர்களை தவிர மற்ற யாரையும் யோசித்து கூட பார்க்க முடியவில்லை என்றும், இந்த படத்தின் மூலம் ஒரு வரலாறு கதாபாத்திரமாகவே அவர்கள் முகம் மனதில் பதிந்து விட்டதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' படத்தில் மொத்த ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்து மாஸ் காட்டிய வந்திய தேவன் கார்த்தி..!
இப்படி பல பாசிட்டிவாக விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், மணிரத்னத்துக்கு முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.
முதல் பாகமாக வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில், 5 பாகம் கொண்ட 'பொன்னியின் செல்வன்' நாவலில் முதல் பாகம் முழுவதும்... இரண்டாம் பாகத்தில் பெருவாரியான கதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தன்னுடைய அடுத்த பாகல் 3 பாகங்களின் கதையை மணிரத்னம் படமாக மாற்ற வேண்டும்.
மேலும் செய்திகள்: Ponniyin Selvan Review: 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் எப்படி இருக்கிறது? விமர்சனம் இதோ..!
இது மிகவும் சவால் நிறைந்த ஒன்றாகவே இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் முதல் பக்கத்திலேயே படம் நீளமாக இருப்பதாகவும், சில காட்சிகள் பொறுமையாக நகர்வதாக ரசிகர்கள் கூறி வரும் நிலையில், இரண்டாம் பாகம் 3 மணிநேரத்தை கடந்து செல்லுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சவாலை எப்படி மணிரத்தினம் சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.