796CC படத்தில் சூர்யா: மாருதி கார்களின் எஞ்சின் உருவான விதம் தான் கதையா?
Suriya 796 CC Movie Story : சூர்யா 796CC என்ற படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

Suriya, Venky Atluri, Suriya 796 CC Movie Story
Suriya 796 CC Movie Story : சூர்யா நடிப்பில் திரைக்கு வந்த கங்குவா மோசமான விமர்சனத்தை பெற்ற நிலையில் வசூலிலும் மோசமான சாதனை படைத்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோ, திஷா பதானி, கருணாஸ், நட்டி சுப்பிரமணியம், கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு ஆகியோர் பலர் நடிப்பில் நவம்பர் 14 ஆம் தேதி திரைக்கு வந்த படம் கங்குவா. ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் ஒரு படமாக இருக்கும் என்றும், ரூ.2000 கோடி வரையில் வசூல் குவிக்கும் என்றும் பட புரோமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா பேசியிருந்தார்.
Retro Movie
ஆனால், படம் வெளியான பிறகு தான் தெரிந்தது கங்குவா ரூ.110 கோடி கூட வசூலிக்கவில்லை. உலகம் முழுவதும் வெளியான கங்குவா ரூ.106 கோடி மட்டுமே வசூல் குவித்து சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான தோல்வி படமாக அமைந்தது. அதோடு, மறக்க முடியாத படமாகவும் கங்குவா இருந்தது. இந்தப் படத்திற்கு பிறகு இப்போது சூர்யா இயக்குநர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் தன்னுடைய 45ஆவது படத்தில் நடித்து வருகிறார்.
Suriya 796 CC Movie Story
இந்தப் படம் ஆன்மீகம் தொடர்பான ஒரு கதையாக இருக்கும் என்று தகவல் வெளியாகி வருகிறது. இந்தப் படத்தில் சூர்யா உடன் இணைந்து த்ரிஷா, லப்பர் பந்து சுவாஸிகா, யோகி பாபு, நட்டி சுப்பிரமணியம், சுப்ரீத் ரெட்டி ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு முதலில் ஏஆர் ரஹ்மான் தான் இசையமைக்க இருந்தார். ஆனால், இந்தப் படத்திலிருந்து விலகவே சாய் அபயங்கார் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
Suriya Filmography
டிரீம் வாரியர் பிக்ஸர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இதே போன்று தான் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்திற்கு இப்போது ரெட்ரோ என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், கருணாகரன், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், நந்திதா தாஸ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். நடிகை ஷ்ரேயா இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
Kanguva Box Office Collection
மேலும், ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. வன்முறையில் ஈடுபட்டு வரும் இளைஞன் (சூர்யா) தன்னுடைய மனைவிக்காக அந்த வன்முறையிலிருந்து விடுபட்டு வெளியேறுகிறார். அதிலிருந்து வெளியேறினாலும் எதிரிகளால் பிரச்சனைகளை சந்திக்கும் அந்த இளைஞன் நிம்மதியான வாழ்க்கையை வாழ்கிறாரா இல்லையா என்பது தான் படத்தோட கதை.
Suriya 796 CC Movie Story
இந்தப் படம் வரும் 2025 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்த 2 படங்களைத் தொடர்ந்து இப்போது லக்கி பாஸ்கர் பட இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். மாருதி கார்களின் முதல் எஞ்சின் எப்படி தயாரிக்கப்பட்டது என்பது பற்றி கதை தான் இந்தப் படம். இந்தப் படத்திற்கு 796CC என்று இந்தப் படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.