ரியல் ஹீரோ என நிரூபித்த சூர்யா... ரசிகர்களின் மேற்படிப்பு மற்றும் வேலை கிடைக்க உதவுவதாக வாக்குறுதி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தனது ரசிகர்களுடனான சந்திப்பின் போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களைக் காட்டிலும் நடிகர் சூர்யா தனித்துவம் வாய்ந்தவராக திகழ்கிறார். இவரது அகரம் பவுண்டேஷன் மூலம் ஏராளமான ஏழை மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதுதவிர சூர்யா தனது ரசிகர்களுக்காகவும் பல்வேறு உதவிகளை மறைமுகமாக செய்து வருகிறார். அதைப்பற்றி தற்போது பார்க்கலாம்.
நடிகர் சூர்யா சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சந்திப்பு மேற்கொண்டார். மாவட்ட வாரியாக இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது ரசிகர்களுக்கு சில வாக்குறுதிகளை அவர் அளித்துள்ளார். அது என்னவென்றால், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளில் யாரேனும் படித்த இளைஞர்கள் இருந்தால் அவர்களின் மேற்படிப்புக்கு உதவ தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... இரட்டை குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு... கியூட்டாக கிறிஸ்துமஸை கொண்டாடிய விக்கி - நயன் ஜோடி
அதுமட்டுமின்றி போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இருந்தால் அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளித்து அரசு பணி கிடைக்க உதவுவதாவும் தெரிவித்துள்ளார். ரசிகர்களை தனக்கு பின்னால் இருக்கும் கூட்டமாக நினைக்காமல் அவர்களில் ஒருவராக இருந்து அவர்களுக்கு உதவ சூர்யா எடுத்துள்ள இந்த முன்னெடுப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் உருவாகும் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து சூர்யா விலகியதாக தகவல் பரவியது. ஆனால் ரசிகர்களுடனான சந்திப்பில் வாடிவாசல் நிச்சயம் நடக்கும் எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சூர்யா.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் மேடையில் கண்ணீர்விட்டு அழுத கமல்ஹாசன்... கலங்கிப்போன ஹவுஸ்மேட்ஸ் - எமோஷனல் வீடியோ இதோ