கூமாபட்டிய விடுங்க; சூர்யா - ஜோதிகாவால் டிரெண்டான இந்த தீவு பற்றி தெரியுமா?
கூமாபட்டி டிரெண்டாகி வரும் இந்த சூழலில் நடிகர் சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் ஜோடியாக சுற்றுலா சென்ற தீவும் கவனம் பெற்றுள்ளது.

Suriya and Jyothika Vacation in Seychelles
இன்ஸ்டாகிராமை திறந்தாலே தற்போது கூமாபட்டியை பற்றிய ரீல்ஸ் தான் ஆக்கிரமித்து உள்ளன. இந்த சூழலில் நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகாவால் தற்போது மற்றுமொரு தீவு டிரெண்டாகி வருகிறது. சூர்யாவும் ஜோதிகாவும் அண்மையில் ஜோடியாக சுற்றுலா சென்று, அங்கு எடுத்த வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தனர். அது எந்த இடம் என நெட்டிசன்கள் வலைவீசி தேடி வந்தனர். அவர் சென்ற அந்த அழகிய நாட்டின் பெயர் ஷீ ஷெல்ஸ். அந்த நாட்டின் சிறப்பம்சம் என்ன... அங்கு சுற்றிப் பார்க்க என்னென்ன இடங்கள் இருக்கிறது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஷீ ஷெல்ஷுக்கு செல்ல நேரடி விமானம்
சூர்யா - ஜோதிகா பகிர்ந்த அந்த ரீல்ஸ் வீடியோவே செம்ம அழகாக இருந்தது. ஆனால் நேரில் சென்று பார்த்தால் அதைவிட 100 மடங்கு அழகாக இருக்குமாம் ஷீ ஷெல்ஸ். இந்தியாவில் இருந்து வெறும் நான்கரை மணிநேரத்தில் ஷீ ஷெல்ஸுக்கு செல்ல முடியும். மும்பையில் இருந்து ஷீ ஷெல்ஷுக்கு நேரடியாக விமானம் உள்ளது. அங்கு மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்தியர்கள் அங்கு செல்ல விசா எடுக்கத் தேவையில்லை.
ஷீ ஷெல்ஷில் இத்தனை தீவுகளா?
ஷீ ஷெல்ஷில் மொத்தம் 115 தீவுகள் உள்ளன. ஆனால் அங்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய தீவுகள் என்று பார்த்தால் மூன்று உள்ளது. அதில் முதலாவது Mahe தீவு, இரண்டாவது Praslin தீவு, மூன்றாவது La Digue தீவு. இந்தியாவில் இருந்து விமானத்தில் சென்றால் அங்குள்ள மாஹே தீவில் தான் இறங்க முடியும். மாஹேவில் இருந்து பிராஸ்லின் தீவுக்கு கப்பலில் தான் செல்ல முடியும். சுமார் ஒன்றரை மணிநேரம் கப்பலில் பயணித்தால் பிராஸ்லின் தீவுக்கு சென்றுவிட முடியும்.
ஷீ ஷெல்ஸில் விளையும் உலகின் மிகப்பெரிய இளநீர்
பிராஸ்லின் தீவில் அனைவரும் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய பீச் ஒன்று உள்ளது. அதன் பெயர் அன்சி லாசியோ. அதேபோல் அங்குள்ள வாலே டீ மாய் என்கிற தேசிய பூங்காவும் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக உள்ளது. வாலே டீ மாய் பூங்காவை அங்குள்ள மக்கள் கார்டன் ஆஃப் ஈடன் என அழைக்கிறார்கள். அந்த தேசிய பூங்காவில் தான் உலகின் மிகப்பெரிய இளநீர் ரகமான கோகோ டீ மெர் என்கிற தாவர வகை அங்கு உள்ளது.
ஷீ ஷெல்ஸில் அடுத்ததாக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் அமைந்துள்ள தீவு என்றால் அது லா டிக் தீவு தான். இந்த தீவில் கயாக்கிங் ரொம்ப பேமஸ். அதுபோக ஆன்சே சோர்சா என்கிற மிகப்பெரிய பீச் ஒன்றும் அங்கு உள்ளது. இந்த லா டிக் தீவில் இருந்து மாஹேவுக்கு கப்பல் மூலமாக தான் செல்ல முடியும். ஒன்றரை மணிநேரத்தில் லா டிக் தீவில் இருந்து மாஹே சென்றுவிட முடியும்.
ஷீ ஷெல்ஸ் ஹெலிகாப்டர் ரைடு
மாஹே தீவில் சிறப்பம்சம் என்னவென்றால், அங்கு ஒரு ஹெலிகாப்டர் ரைடு உள்ளது. இரண்டு விதமான ரைடு அதில் உள்ளது. அதன்படி 15 நிமிட ரைடில் மாஹே தீவை மட்டும் சுற்றிக் காட்டுவார்களாம். இதுதவிர 90 நிமிடங்களுக்கு ஒரு ரைடு இருக்கும். அதில் மாஹே, பிராஸ்லின், லா டிக் ஆகிய மூன்று தீவுகளையும் ஹெலிகாப்டரிலேயே சுற்றிக் காட்டுவார்களாம். உலகில் வேறு எங்கும் கிடைக்காத ஒரு ஹெலிகாப்டர் ரைடாக அது இருக்கும்.
ஷீ ஷெல்ஸில் வாழும் 5000 தமிழர்கள்
ஷீ ஷெல்ஷுக்கு மற்றுமொரு சிற்றப்பம்சம் என்னவென்றால் நம்முடைய தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு வசிக்கிறார்களாம். இதுதவிர நவசக்தி விநாயகர் கோவில் என்கிற ஒரு பெரிய இந்துக் கோவிலே ஷீ ஷெல்ஷில் அமைந்துள்ளதாம். தற்போது சூர்யா - ஜோதிகா அங்கு விசிட் அடித்த பின்னர் கூமாபட்டிக்கு நிகராக ஷீ ஷெல்ஸ் தீவும் டிரெண்டாகி வருகிறது.